விளையாட்டு

தோனி எவ்வாறு அப்படி சொல்லலாம் ? ஒருவேளை பயத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்" -மலிங்கா கூறியது என்ன ?

பதிரனா குறித்து தோனி சொன்ன கருத்து விளையாட்டு பேச்சு என நினைக்கிறேன் என இலங்கை வீரர் மலிங்கா கூறியுள்ளார்.

தோனி எவ்வாறு அப்படி சொல்லலாம் ? ஒருவேளை பயத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்" -மலிங்கா கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 60ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி பரம வைரியான மும்பை அணியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பதிரனா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய சென்னை அணி 17.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாங்க பந்துவீசிய பதிரனாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் மலிங்காவை போல சிறப்பாக பந்துவீசி வரும் பதிரனாவை பலரும் பாராட்டினர்.

தோனி எவ்வாறு அப்படி சொல்லலாம் ? ஒருவேளை பயத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்" -மலிங்கா கூறியது என்ன ?

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி " பதிரானா போன்ற வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பௌலர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால்வாய்ந்தது. அவரின் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்துமே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.

அவரை ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வைப்பதை இலங்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். மேலும் ஐசிசி தொடர்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும்.கடைசியாகப் பார்க்கும்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்" என்று கூறியிருந்தார்.

தோனி எவ்வாறு அப்படி சொல்லலாம் ? ஒருவேளை பயத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்" -மலிங்கா கூறியது என்ன ?

இந்த நிலையில், பதிரனா குறித்து தோனி சொன்ன கருத்து விளையாட்டு பேச்சு என நினைக்கிறேன் என இலங்கை வீரர் மலிங்கா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பதிரனாவை ரெட்-பால் கிரிக்கெட் ஆட வைக்கக்கூடாது என சொல்பவர்கள் அவர் காயமடைந்து விடுவார் என்ற பயத்தில் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நான் ரெட்-பால் கிரிக்கெட் ஆடும்போது இப்படி யாரும் என்னை எச்சரிக்கவில்லை. 2004-லிருந்து 2010 வரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடினேன். நான் அவரை போன்றே பந்துவீசியவன், அதில் இருக்கும் சவால்கள் என்ன என்பது எனக்குத் தெரியும்.

என்னைக் கேட்டால் டெஸ்ட் தொப்பியை எப்படியாவது பெற்றுவிடு என்றே பதிரனாவிடம் சொல்லுவேன். அவர் ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் ஆடலாம். 10 டெஸ்ட் ஆடலாம், 100 டெஸ்ட் கூட ஆடலாம். அதை யாருமே கணிக்க முடியாது. 15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடினால் கூட அவரது பௌலிங் திறன் மேம்படும்.எப்படியாவது என்னைவிட சிறந்த வீரராக பதிரனாவை ஆக்கி விடவேண்டும் என நினைக்கிறேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories