விளையாட்டு

முடிவுக்கு வந்த டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ? சேப்பாக்கத்தில் மாஸ் காட்டிய CSK !

சென்னை அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

முடிவுக்கு வந்த டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ? சேப்பாக்கத்தில் மாஸ் காட்டிய CSK !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 7 ஆட்டங்களில் அபாரமாக செய்யப்பட்ட சென்னை அணி அதன்பின்னர் அடுத்தடுத்த தோல்விகள், மழையால் ஒருபோட்டி ரத்து என சிறிது தடுமாறியது.

அதன்பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் பரம வைரியான மும்பை அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

முடிவுக்கு வந்த டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ? சேப்பாக்கத்தில் மாஸ் காட்டிய CSK !

மைதானம் மெதுவாக இருந்த காரணத்தால் இந்த போட்டி குறைந்த இலக்கை கொண்ட போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சென்னை அணியும் அதிரடியாக விளையாடுவதை தவிர்த்து சுலபமான பந்துகளை மட்டுமே அடித்து ஆடியது. இடையே தடுமாறிய கான்வே 10 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரஹானே ருத்துராஜ் ஜோடி சேர்ந்தனர்.

ஆனால், ருத்துராஜ், மொயின் அலி அடுத்தடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த துபே சில சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் சீரான இடைவெளியில் சென்னை அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

முடிவுக்கு வந்த டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ? சேப்பாக்கத்தில் மாஸ் காட்டிய CSK !

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வார்னர் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க, சிறிது அதிரடி காட்டிய சால்ட் 17 ரன்களுக்கும் மிட்சேல் மார்ஷ் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் மனிஷ் பாண்டே -ரூசோ ஆகியோர் மெதுவாக ஆட சென்னை அணி வெற்றியை நோக்கி நடைபோட்டது.

இறுதிக்கட்டத்தில் டெல்லி அணி வீரர்களால் அதிரடியாக ஆடமுடியாத நிலையில், அடுத்தடுத்து அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே குவிக்க முடிந்த நிலையில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories