விளையாட்டு

”அந்த ஆட்டம்தான் இந்திய அணியில் எனக்கான இடத்தை பெற்று தந்தது” -தோனி கூறிய அந்த ஆட்டம் என்ன தெரியுமா ?

சவாய் மான்சிங் மைதானத்தை பற்றிய தனது நினைவலைகளை தோனி பகிர்ந்து கொண்டுள்ளார்.

”அந்த ஆட்டம்தான் இந்திய அணியில் எனக்கான இடத்தை பெற்று தந்தது” -தோனி கூறிய அந்த ஆட்டம் என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

”அந்த ஆட்டம்தான் இந்திய அணியில் எனக்கான இடத்தை பெற்று தந்தது” -தோனி கூறிய அந்த ஆட்டம் என்ன தெரியுமா ?

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை சந்தித்தது. இதில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

”அந்த ஆட்டம்தான் இந்திய அணியில் எனக்கான இடத்தை பெற்று தந்தது” -தோனி கூறிய அந்த ஆட்டம் என்ன தெரியுமா ?

இந்த போட்டிக்கு பின்னர் தோனி போட்டி நடைபெற்ற சவாய் மான்சிங் மைதானத்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ நான் இந்திய அணியில் அறிமுகமானபின்னர் என்னுடைய முதல் சதத்தை விசாகப்பட்டினத்தில் வைத்து அடித்திருந்தேன். அந்த சதம் எனக்கு ஒரு 10 போட்டிகளுக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. ஆனால் ராஜஸ்தானின் சவாய் மான்சிங் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நான் அடித்த 183 ரன்கள் எனக்கு அந்த வருடம் முழுவதற்குமான வாய்ப்பை இந்திய அணியில் பெற்றுக்கொடுத்தது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories