விளையாட்டு

படுபாவி பய, இப்படியா செய்வ? -BCCI-க்கு 40 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்.. பின்னணி என்ன ?

பஞ்சாப் பந்துவீச்சளர் அர்ஷ்தீப் சிங்கால் பிசிசிஐ அமைப்புக்கு சுமார் 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுபாவி பய, இப்படியா செய்வ? -BCCI-க்கு 40 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் தொடரின் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஷார்ட் 11,பிரபசிம்ரன் 26, அதர்வா தைடே 29 , லிவிங்ஸ்டன் 10 ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஒருகட்டத்தில் 83-4 என பஞ்சாப் அணி இந்த போட்டியில் பின்னடைவை சந்தித்தது.

ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கர்ரன் மற்றும் ஹார்ப்ரீட் சிங் ஆட்டத்தையே மாற்றினர். அதிலும் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16-வது ஓவரில் 31 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி அதிரடி காட்டியது. 41 ரன்களில் ஹார்ப்ரீட் சிங் வெளியேறினாலும் அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா சரவெடியாக வெடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி யாரும் எதிர்ப்பாராத வகையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் கள் குவித்தது.

படுபாவி பய, இப்படியா செய்வ? -BCCI-க்கு 40 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்.. பின்னணி என்ன ?

தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த கிரீன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடினர். ரோகித் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின் வந்த சூரியகுமார் யாதவ் அதிரடி அரைசதம் விளாசினார். இறுதிக்கட்டத்தில் 3 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட அர்ஷிதீப் சிங் வீசிய 18-வது ஓவரில் 9 ரன் மட்டுமே கிடைத்தது. ஆனால் 19-வது ஓவரில் மும்பை 15 ரன் குவிக்க இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அந்த ஓவரை அபாரமாக வீசிய அர்ஷிதீப் சிங் இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக இறுதியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.

படுபாவி பய, இப்படியா செய்வ? -BCCI-க்கு 40 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்.. பின்னணி என்ன ?

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய இறுதிஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்தப் பந்து மிடில் ஸ்டம்ப்பில் பட அது இரண்டு துண்டாகியது.அதன்பின்னர் களமிறங்கிய நேகல் வதீரா,திலக் வர்மா ஆட்டமிழந்ததைப் போலவே மிடில் ஸ்டம்ப் இரண்டாக பிளந்த நிலையில் ஆட்டமிழந்தார்.இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு மிடில் ஸ்டம்ப்புகளை இரண்டு துண்டாக்கியுள்ளார்.

படுபாவி பய, இப்படியா செய்வ? -BCCI-க்கு 40 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்.. பின்னணி என்ன ?

ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்கள் நவீன தொழில்நுட்பம் நிறைந்த எல்.இ.டி விளக்குகளுடன் கூடியது. இதில் கேமரா, மைக் போன்றவையும் இடம்பெற்றிருக்கும். அதோடு ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்று கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு ஸ்டம்ப்புகள் உடைத்துள்ள நிலையில் இதனால் பிசிசிஐ அமைப்புக்கு சுமார் 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories