விளையாட்டு

மீண்டும் சேப்பாக் கோட்டைக்கு திரும்பிய CSK.. SRH அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

மீண்டும் சேப்பாக் கோட்டைக்கு திரும்பிய CSK.. SRH அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மீண்டும் சேப்பாக் கோட்டைக்கு திரும்பிய CSK.. SRH அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி !

அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்யவந்தது.

ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி ரன்குவிக்க தடுமாறிய நிலையில், அந்த அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஹரி ப்ரூக், அபிஷேக் சர்மா, திரிபாதி, கேப்டன் மார்க்ரம் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை மட்டுமே குவித்தது.

மீண்டும் சேப்பாக் கோட்டைக்கு திரும்பிய CSK.. SRH அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி !

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் கான்வே, ருத்துராஜ் சென்னை அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். பவர் பிளே ஓவர்களில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த இணை 6 ஓவர்களில் 60 விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் குவித்தனர்.

இந்த இணையை ஹைதராபாத் வீரர்களால் பிரிக்கமுடியாத நிலையில், ரன்அவுட் காரணமாக ருத்துராஜ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே 9 ரன்களிலும், ராயுடு 9 ரன்களிலும் ஆட்டமிழக்க கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

banner

Related Stories

Related Stories