விளையாட்டு

"இனி ஸ்சுவிச்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம்" -முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர் எச்சரிக்கை !

ஸ்சுவிச்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கிரெடிட் சூயிஸ் வங்கி 9000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இனி ஸ்சுவிச்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம்" -முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1983-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்தது. ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக அறிவித்தது..

இதன் காரணமாக சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.இது குறித்த தகவல் பரவியதும் 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

"இனி ஸ்சுவிச்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம்" -முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர் எச்சரிக்கை !

இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் சிக்னேச்சர் வங்கியும் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்த சம்பவங்கள் நடந்து ஒரே வாரத்தில் ஐரோப்பிய நாடான ஸ்சுவிச்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கி பெரும் நிதி சிக்கலில் தவித்து திவால் நிலையை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நிதி சிக்கலில் தவித்து வந்த அந்த வங்கியின் முக்கிய பங்குதாரரான அம்மர் அல் என்பவர் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு இருப்பை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என வெளிப்படையாக அறிவித்த நிலையில் அந்த வங்கியின் பங்குகள் சுமார் 30 சதவீத சரிவை சந்தித்தன.

"இனி ஸ்சுவிச்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம்" -முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர் எச்சரிக்கை !

அதனைத் தொடர்ந்து திவால் நிலையை தவிக்க கிரெடிட் சூயிஸ் வங்கி ஸ்சுவிச்சர்லாந்தின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் டாலர் கடன் பெற்று நிலைமையை சமாளித்தது. ஆனால், அந்த தொகையை திரும்ப கொடுக்கமுடியாது நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை முழுமையாக கைப்பற்றியது.

அதன் பின்னர் சிக்கன நடவடிக்கையாக கிரெடிட் சூயிஸ் வங்கியில் வேலை செய்த 9,000 பேரை நீக்க UBS வங்கி முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் ஸ்சுவிச்சர்லாந்தின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில். முன்னாள் ஊழியர் ஒருவர், "இனி, சுவிஸ் வங்கிகளில் பணம் சேமிப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த தவறுக்குக் வங்கி மற்றும் அதன் வாரியமுமே காரணம் ஆகும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories