விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்த தமிழ்நாடு வீரர்கள்.. ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய சாய் சுதர்சன் !

டெல்லி குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் ஆட்டத்தில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்த தமிழ்நாடு வீரர்கள்.. ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய சாய் சுதர்சன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய நிலையில், நேற்று தனது இரண்டாவது போட்டியில் டெல்லியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்த தமிழ்நாடு வீரர்கள்.. ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய சாய் சுதர்சன் !

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோர் அணியின் ரன்னை கொஞ்சம் உயர்த்தினர்.

ஆனால் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ டெல்லி அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது. ஆனால் இறுதியில் அக்சர் படேல் அதிரடியாக 36 ரன்கள் குவித்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் என்ற சவாலான ரன்னை குவித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்த தமிழ்நாடு வீரர்கள்.. ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய சாய் சுதர்சன் !

பின்னர் ஆடிய குஜராத் அணியும் டெல்லி அணியை போலவே ஆரம்பத்தில் தடுமாறியது. சகா,கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றனர். 50 ரன்களை இந்த ஜோடி கடந்த நிலையில், 29 ரன்களில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.

ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் சாய் சுதர்சனோடு இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியை 19-வது ஓவரிலேயே வெல்ல வைத்தார். இந்த போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories