விளையாட்டு

"சூர்யகுமாருக்கு மட்டும் எப்படி அணியில் பாதுகாப்பு கிடைக்கிறது ?" - முன்னாள் இந்திய வீரர் கேள்வி !

ஒரு திறமையான கிரிக்கெட் வீரரை ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"சூர்யகுமாருக்கு மட்டும் எப்படி அணியில் பாதுகாப்பு கிடைக்கிறது ?" - முன்னாள் இந்திய வீரர் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

"சூர்யகுமாருக்கு மட்டும் எப்படி அணியில் பாதுகாப்பு கிடைக்கிறது ?" - முன்னாள் இந்திய வீரர் கேள்வி !

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தையும் இந்திய மண்ணில் முதல் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒருநாள் அணியில் சூரியகுமார் தொடர்ந்து சொதப்பி வருகிறார். டெஸ்ட் அணியில் இடம்கிடைத்த போதிலும் அங்கும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். தற்போது முடிவடைந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹட் ட்ரிக் டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார்.

"சூர்யகுமாருக்கு மட்டும் எப்படி அணியில் பாதுகாப்பு கிடைக்கிறது ?" - முன்னாள் இந்திய வீரர் கேள்வி !

இந்த நிலையில், ஒரு திறமையான கிரிக்கெட் வீரரை ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "டி20 கிரிக்கெட் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடும் திறனை வைத்து ஒரு வீரரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைப்பது சரியானதாக இருக்காது. குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் சூரியகுமார் யாதவ்தான்.

ஒரு திறமையான கிரிக்கெட் வீரரை ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கிரிக்கெட்டில் நிலைத்திருக்க சிறந்த திறன் வீரருக்கு தேவைப்படும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி காரணமாக எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories