ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் மீது விழுந்திருக்கிறது. 34 வயதான விராட் கோலி சமீபமாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து சதங்கள் அடித்து மிரட்டினார் அவர். அதனால், இலங்கை அணியை வைட் வாஷ் செய்தது இந்திய அணி.
பல ஆண்டுகளாக இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இழந்து தவித்து வந்தார். நிறைய அரைசதங்கள் அடித்தாலும் அதனை சதமாக மாற்றுவதில் தொடர்ந்து சோபித்த வந்தார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சதமடித்திருந்தார். அது சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 70வது சதமாக பதிவாகியிருந்தது. அதன் பின்னர் நெருநாள் அவரின் சத்தம் வராமல் இருந்தது.
ஆனால், ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் மிகு எதிரான டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் பார்ம்க்கு திரும்பினார். அதன்பின்னர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து சதங்கள் அடித்து மிரட்டினார். இதன் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், விராட் கோலியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சதமடித்து அசத்தினாலும், டெஸ்ட் தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். அதிலும் சமீப காலமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த தொடரில் கூட சுழற்பந்து வீச்சாளர்களிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விராட் கோலி சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாற காரணம் என்ன என்பது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளை விளையாடுவதற்கு முன் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஆடுகளங்களில் அதிகமான போட்டிகளை ஆடுவதால் சுழல் பந்துவீச்சை திறமையாக ஆடுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் அதே வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததும் அதிகப்படியான வேகப்பந்துவீச்சை சந்தித்து ஆட வேண்டி உள்ளது . இதன் காரணமாக அவர்களது சுழற்சிக்கு எதிரான பேட்டிங் திறன் சற்று குறைந்துள்ளது.
விராட் கோலியம் கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக திறமையான ஆட்டம் முறையை கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து அதிகப்படியான வெளிநாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை ஆடியதன் மூலம் சிலர் பந்துவீச்சுக்கு எதிரான அவரது ஆட்டத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது . ஆனால் அவரால் இதை சரி செய்து கொண்டு மீண்டும் திறம்பட விளையாடுவார். நிச்சயமாக அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு வருவார்" என்று கூறியுள்ளார்.