இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், அணியில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டம் காரணமாக டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதால் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கூட முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு திணருவார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், என்னுடைய ஒட்டு மொத்த கிரிக்கெட் கரியரிலும் வலை பயிற்சியில் முகமது ஷமியை எதிர்கொள்வது தான் மிகவும் கடுமையாக இருந்தது, அவர் பயிற்சியின் போது எப்போதும் எனது விக்கெட்டை வீழ்த்திவிடுவார். வலைப் பயிற்சியும் பொழுது அவரை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமாகும்.
எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறது என நினைத்து கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களிடத்தில் சென்று கேட்டபோது, பேன் அவர்களும் வலை பயிற்சி பொழுது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு திணருவார்கள் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக வலை பயிற்சியில் முகமது ஷமியின் பந்துவீச்சை அவர்கள் வெறுப்பார்கள்"என்று கூறியுள்ளார்.