விளையாட்டு

"இந்த இருவர் இருக்கும்வரை இந்தியா செல்லும் அனைவருக்கும் சங்குதான்" -இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

இந்த தோல்வியின் பின்னர் ஆஸ்திரேலியா அணியால் திரும்பவும் அதிலிருந்து மீண்டு தப்பித்து வெளியே வர வழியே இல்லை என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

"இந்த இருவர் இருக்கும்வரை இந்தியா செல்லும் அனைவருக்கும் சங்குதான்" -இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

"இந்த இருவர் இருக்கும்வரை இந்தியா செல்லும் அனைவருக்கும் சங்குதான்" -இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததோடு இரண்டாம் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

"இந்த இருவர் இருக்கும்வரை இந்தியா செல்லும் அனைவருக்கும் சங்குதான்" -இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

இதன் காரணமாக அந்த அணியின் தோல்வியை பலரும் விமர்சித்துள்ள நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக, அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடும் அனைத்து அணிகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

அதிலும், அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணியின் பந்துவீச்சை இந்தியாவில் எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமாக ஒன்றுதான். இந்த தோல்வியின் பின்னர் ஆஸ்திரேலியா அணியால் திரும்பவும் அதிலிருந்து மீண்டு தப்பித்து வெளியே வர வழியே இல்லை" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories