விளையாட்டு

அஷ்வின் ஜெராக்ஸ்..19 ஆண்டு கனவு: இந்தியாவைத் தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி எடுத்துள்ள புது வியூகம்!

டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்த அஷ்வின் போன்று பந்து வீசும் நபரை வைத்து ஆஸ்திரேலிய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அஷ்வின் ஜெராக்ஸ்..19 ஆண்டு கனவு: இந்தியாவைத் தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி எடுத்துள்ள புது வியூகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்மித் போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோது கூட ஆஸ்திரேலிய அணியால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவர்களின் வெற்றியைத் தடுக்கக் கூடிய ஒரு நபராக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இருந்து வருகிறார். இந்திய மைதானங்களில் இவரின் சுழற்பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்களால் எதிர் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரெலிய அணி டெஸ்ட தொடர் விளையாட இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது.

தங்களது 19 ஆண்டு கனவை இந்த டெஸ்ட் தொடரிலாவது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அஷ்வினை சமாளிக்கவும் புது வியூகத்தையும் இவர்கள் வகுத்துள்ளனர்.

அஷ்வின் ஜெராக்ஸ்..19 ஆண்டு கனவு: இந்தியாவைத் தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி எடுத்துள்ள புது வியூகம்!

அது என்னவென்றால், அஷ்வின் போன்றே பந்து வீசும் மகேஷ் பித்தியா என்ற இளம் சுழற்பந்து வீச்சாளரைத் தேடிப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மகேஷ் பித்தியா கடந்த ஆண்டு முதல்தான் முதல் தர கிரிக்கெட்போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் பரோடா அணிக்காக அறிமுகமானார். அப்போது அஷ்வின் போன்றே பந்து வீசி அனைவரது கவனத்தையும் பெற்றோர். இவரது வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் தான் மகேஷ் பித்தியாவின் பெயரை அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. அஷ்வின் போன்று பந்து வீசும் மகேஷ் பித்தியாவை வைத்து பயிற்சி எடுத்தாலும் போட்டி நடக்கும் போதுதான் அது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கை கொடுத்தாது என்பது தெரியும்.

banner

Related Stories

Related Stories