விளையாட்டு

"இந்திய அணியில் இதுபோன்ற சோதனை எல்லாம் தேவை இல்லாதது" - முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து!

ஒரே உடல்தகுதி சோதனை எல்லாம் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

"இந்திய அணியில் இதுபோன்ற சோதனை எல்லாம் தேவை இல்லாதது" - முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடந்தது. அதில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோஹித் ஷர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமண், தேர்வுக் குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை செயல்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறித்தும் ரு வீரர்களின் வேலைப்பளு, ஃபிட்னஸ் போன்ற பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்துள்ளது.

"இந்திய அணியில் இதுபோன்ற சோதனை எல்லாம் தேவை இல்லாதது" - முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து!

அதுமட்டுமல்லாமல், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், 20 வீரர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்திருப்பதாகவும், அந்த வீரர்களை உலகக் கோப்பை வரை பரிசோதிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அந்த கூட்டத்தின் முடிவில் வீரர்கள் தகுதி குறித்த முக்கிய தகவல்களை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் யோ யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா டெஸ்ட் இரண்டும் வீரர்கள் தேர்வின் அம்சமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடக்கூடிய 20 வீரர்களை பிசிசிஐ ஏற்கெனவே தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"இந்திய அணியில் இதுபோன்ற சோதனை எல்லாம் தேவை இல்லாதது" - முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து!

இந்த நிலையில், இது போன்ற ஒரே உடல்தகுதி சோதனை எல்லாம் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,"யோ யோ மற்றும் டெக்ஸ்டா உள்ளிட்ட கடினமான உடல்தகுதி தேர்வுகளில் தேர்வு பெறும் வீரர்கள் மட்டுமே அணித்தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் இதுபோன்ற கடினமான உடல் தகுதி தேர்வுகள் வீரர்களுக்கு தேவையில்லை.

இந்திய அணியை பொறுத்தவரை சுழல் பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரே மாதிரியான உடல்தகுதி தேவையில்லாதது. அதே போல விக்கெட் கீப்பருக்கும், பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியான உடல் தகுதி தேவையில்லை. இதனால் கிரிக்கெட் உடல்தகுதி மட்டுமே போதுமானது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories