பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த ஆண்டு பெருங்குடலில் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பிறகு அவர் தொடர்ந்து மருத்து கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். மேலும் அவருக்கு கீமோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தேவந்தது. கடந்த மாதம் இறுதியில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே சிசிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவரது உடலில் மற்ற பாகங்களிலும் புற்று நோய் பரவியதாக மருத்துவர்கள் கூறினர். அதோடு இதயம், சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் தொடர் பீலே சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால், சிகிச்சை பலனின்றி பீலே கடந்த டிசம்பர் 30-ம் நாள் உயிரிழந்தார்.
அவருக்கு ரசிகர்கள், கால்பந்து வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவைத் தொடேன்ற்து அவரின் உடல் சொந்த ஊரான சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கும் மேல் அங்கு வைக்கப்பட்டிருந்த உடலை காண உலகெங்கும் இருந்து பல ரசிகர்களும் குவிந்து ஜாம்பவானுக்கு இறுதிவிடை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பீலேவின் உடல் சான்டோஸில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உலகின் மிக உயரமான கல்லறை தோட்டமான நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தின் 9-வது மாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் பீலே தனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்த சாண்டோஸ் கிளப் மைதானம் தெரியும் என்றும், இங்குதான் அடக்கம் செய்யவேண்டும் என்று அவர் கூறியதாகும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான் விரும்பிய இடத்தில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஓய்வெடுத்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.