விளையாட்டு

குல்தீப்பை எடுக்கவில்லை,, பிட்ச் பற்றி தெரியாது? நீ எல்லாம் கேப்டனா?- KL ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் !

கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை பிட்ச் பற்றி தெரியாமலே உக்கார வைத்த கேப்டன் ராகுலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குல்தீப்பை எடுக்கவில்லை,, பிட்ச் பற்றி தெரியாது? நீ எல்லாம் கேப்டனா?- KL ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவிக்க, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

குல்தீப்பை எடுக்கவில்லை,, பிட்ச் பற்றி தெரியாது? நீ எல்லாம் கேப்டனா?- KL ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் !

பின்னர் ஆடிய வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் முக்கியமான நேரத்தில் 40 ரன்கள் குவித்ததோடு இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் போட இரு அணி கேப்டன்களும் வந்த நிலையில், வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின்னர் இந்திய அணி கேப்டன் ராகுல் இந்திய அணியை அறிவித்தார். அப்போது குல்தீப் யாதவ்க்கு பதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை அணியில் தேர்வு செய்திருப்பதாக கூறினார்.

குல்தீப்பை எடுக்கவில்லை,, பிட்ச் பற்றி தெரியாது? நீ எல்லாம் கேப்டனா?- KL ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் !

மேலும், "எனக்கு இந்தப் பிட்ச் குழப்பமாக இருக்கிறது, பிட்ச் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை, அதைக் கணிக்க நிபுணர்கள், பயிற்சியாளர்கள் என்று அனுபவஸ்தர்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன்" என்று கூறினார். அவரின் இந்த பேச்சும், முடிவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை பிட்ச் பற்றி தெரியாமலே உக்கார வைத்த கேப்டன் ராகுலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இப்போது இருக்கும் அணியிலேயே அதிகம் சொதப்புவது ராகுல்தான், அதனால் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories