தென்னாபிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியின் கோட்டையான பிரிஸ்பன் காபா மைதானத்தில் நடைபெற்றது.
முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிலும் கெயில் வேரின் என்ற வீரர் இறுதிக்கட்டத்தில் 64 ரன்கள் எடுத்ததால் அந்த அணி கொஞ்சம் டீசண்டான ரன் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியும் இந்த பிட்சில் கடுமையான திணறியது. தலைசிறந்த வீரர்கள் என கூறப்படும் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் போன்றோர் கூட ரன்குவிக்க முடியாமல் திணறினர்.
ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்ஜோடி சேர்ந்ததால் அந்த அணி சவாலான இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஹெட் மட்டும் 92 ரன்கள் குவித்திருப்பார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி வெறும் 99 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி அளித்தது. பின்னர் 36 ரன்களை இலக்காக வைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 35 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இருந்த இந்த போட்டி வெறும் 2 நாளில் முடிவடைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலிய, இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட துணைக்கண்ட மைதானங்கள் சுலபந்துவீச்சுக்கு சாதகமாகவும் அமைக்கப்படும். ஆனால் துணைக்கண்ட மைதானங்களில் நடைபெறும் போட்டிகள் 3 நாளில் முடிந்தால் அதனை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ரசிகர்களை தாண்டி அங்குள்ள மீடியாக்களும் இது தரமில்லாத ஆடுகளம் என விமர்சிக்கும்.
அதேநேரம் அவர்கள் நாட்டின் நடைபெறும் போட்டி 3 நாளுக்குள் முடிந்தால் தரமான வேகப்பந்து வீச்சு என கூறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை துணைக்கண்ட நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.