விளையாட்டு

உலகக் கோப்பையில் மகுடம் யாருக்கு? கோல்டன் ஷூ விருதை வெல்வாரா மெஸ்ஸி? இன்று நடக்கிறது FIFA இறுதிப்போட்டி!

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் இன்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதுகின்றன.

உலகக் கோப்பையில் மகுடம் யாருக்கு? கோல்டன் ஷூ விருதை வெல்வாரா மெஸ்ஸி? இன்று நடக்கிறது FIFA இறுதிப்போட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரேஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் இன்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மல்லுகட்டுகின்றன.

இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், அதன்பின்னர் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போடுகிறது.லீக் சுற்றில் மெக்சிகோ, போலந்து அணியுடனான அடுத்தடுத்த ஆட்டத்தில் எதிரணியை கோல் அடிக்க விடாமல் வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது அர்ஜெண்டினா.

உலகக் கோப்பையில் மகுடம் யாருக்கு? கோல்டன் ஷூ விருதை வெல்வாரா மெஸ்ஸி? இன்று நடக்கிறது FIFA இறுதிப்போட்டி!

நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா, காலிறுதியிலும் அதே கர்ஜனையை தொடர்ந்தது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை காலிறுதியில் எதிர்கொண்ட அர்ஜெண்டினா, பெனால்டி ஷூ அவுட் முறையில் வெற்றி கண்டு 6வது முறையாக அரையிறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற வரலாற்றை தொடர குரேஷியாவுடன் மல்லுக்கட்டியது அர்ஜெண்டினா. மெஸ்ஸியின் மாயாஜாலம் அரையிறுதியில் கைகொடுக்க எதிரணியை கோல் அடிக்க விடாமல், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட அர்ஜெண்டினா, 6வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.

உலகக் கோப்பையில் மகுடம் யாருக்கு? கோல்டன் ஷூ விருதை வெல்வாரா மெஸ்ஸி? இன்று நடக்கிறது FIFA இறுதிப்போட்டி!

மறுபுறம், நடப்பு சாம்பியன் என்ற கம்பீரத்துடன் அர்ஜெண்டினாவை மிரட்ட காத்திருக்கிறது பிரான்ஸ். மீண்டும் மகுடம் சூடும் முனைப்பில் களமிறங்கிய பிரான்ஸ் அணியில் பென்சமா, போக்பா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், நான் இருக்கிறேன் என அணியின் நம்பிக்கையை மும்மடங்கு உயர்த்தினார் இளம் நாயகன் எம்பாப்பே. ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை வீழ்த்தி முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. போலந்து அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ், காலிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி 7வது முறையாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் ஆப்ரிக்க நாடான மொராக்கோவை 2-0 என எளிதாக சாய்த்த பிரான்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இன்று நடைபெறும் மகுடத்திற்கான யுத்தத்தில் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் - முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணிகள் ரசிகர்களுக்கு தங்கள் கோல்களால் விருந்து படைக்க காத்திருக்கின்றன. பிரான்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் 60ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்ற அணி என்ற பெருமையைப் பெறும்.

உலகக் கோப்பையில் மகுடம் யாருக்கு? கோல்டன் ஷூ விருதை வெல்வாரா மெஸ்ஸி? இன்று நடக்கிறது FIFA இறுதிப்போட்டி!

அதேசமயம், அர்ஜெண்டினா வெற்றி பெற்றால் 1986க்கு பிறகு அதாவது, 36ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மகுடத்தை அலங்கரிக்கும். அத்துடன், உலகக்கோப்பையுடன் ஜாம்பவான் மெஸ்ஸியை வழியனுப்ப காத்திருக்கிறது அர்ஜெண்டினா கால்பந்து களம். கோப்பையை வெல்லும் அணிக்கு 342 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். தோல்வி அடையும் அணி 244 கோடி ரூபாய் பரிசாக பெறும். எந்த அணி வெற்றி பெற்றாலும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னெழுத்து தான். ஆகையால், சரித்திரத்தை உருவாக்க போகும் அணி எது என்ற திக் திக் கேள்விக்கான பதிலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். மெஸ்சியா? எம்பாப்பேவா? இருவரில் களத்தில் மிரட்டப்போவது யார் என்று ஒரு பக்கம் ஆர்வம் தொற்றியுள்ள நிலையில் அவர்களிடையே இன்னொரு குடுமிபிடியும் நிலவுகிறது. தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் இருக்கும் அவர்களில் யாருக்கு தங்க ஷூ விருது கிடைக்கப்போகிறது என்பதும் இறுதிப்போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் எகிற வைக்கிறது.

-மீனா.

banner

Related Stories

Related Stories