விளையாட்டு

சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!

ஃபிபா உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படும் கால்பந்து சார்ஜ் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடருக்கு பின்னர் மிகப்பெரிய தொடர் என்பதால் உலகமக்களின் கண்கள் கத்தாரில் குவிந்துள்ளது.

இந்த கால்பந்து தொடரில் முன்னர் பயன்படுத்தப்படாத பல்வேறு தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Inertial Measurement Unit (IMU) என்ற கால்பந்தில் இருக்கும் சென்சார், மற்றும் FIFA Goal Line Technology வசதி, மேம்படுத்தப்பட்ட Video Assistant reference (VAR) வசதி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!

இதில் Inertial Measurement Unit (IMU) என்ற கால்பந்தில் இருக்கும் சென்சார் வசதி பல்வேறு விளையாட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் கால்பந்து சார்ஜ் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக ஃபிபா நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிடாஸ் நிறுவனத்தின் கால்பந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அந்த நிறுவனம் இந்த உலகக்கோப்பை தொடருக்காக பிரத்தேயகமாக இந்த வகை கால்பந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!

இந்த கால்பந்துக்கு அல் ரிஹ்லா( #Al_Rihla- பயணம் செய்யக் கூடியது) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இப்னு பதுதாவின், புகழ்பெற்ற, உலகப் பயணக்குறிப்பான Al Rihla- The Journeyயின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த பந்தின் உள்ளே 14g நிறையுடய சென்சார்(500Hz inertial measurement unit (IMU) motion sensor) சஸ்பென்ஷன் மூலம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது பந்தின் வேகம், திசை, ஓட்டம் என்பனவற்றை நொடிக்கு 500தடவைகள் VAR தொழில்நுட்பத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் பந்தின் வேகம், அது செல்லும் திசை, பந்து எந்த இடத்தில் இருந்தது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.

சார்ஜ் செய்யப்படும் கால்பந்துகள்.. உள்ளே இருப்பது என்ன ? FIFA உலகக்கோப்பையை அதிரவைத்த நவீன தொழில்நுட்பம்!

மேலும், எந்த இடத்தில பந்து உதைக்கப்பட்டது என்றும் அந்த சமயம் Offside நிகழ்வு ஏற்பட்டதா? இல்லையா? என்பதையும் இதன்மூலம் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த சென்சாருக்கு பவர் கொடுக்கவே அதற்கு கேபிள் மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் பந்து நகர்ந்துகொண்டிருக்கும் போது 6 மணிநேரமும், சாதாரண நேரத்தில் 18 மணிநேரம் வரையிலும் சார்ஜ் நிற்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்பந்து முழுக்க பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நிலையில், ஒரு பந்து 165 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை தயாரிக்கும் ஊழியர்களுக்கு 0.75 டாலர் மட்டுமே ஊதியமாக அடிடாஸ் நிறுவனம் கொடுப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories