விளையாட்டு

1000 போட்டிகள்..789 கோல்கள்.. மாரடோனாவின் சாதனை முறியடிப்பு.. கால்பந்தில் உச்சம் தொடும் ஜாம்பவான் மெஸ்ஸி!

அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸி க்ளப் மற்றும் சர்வதேச அளவில் 1000 போட்டிகளில் ஆடி சாதனை படைத்துள்ளார்.

1000 போட்டிகள்..789 கோல்கள்.. மாரடோனாவின் சாதனை முறியடிப்பு.. கால்பந்தில் உச்சம் தொடும் ஜாம்பவான் மெஸ்ஸி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதன் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி அந்த அணிக்காக கோல் அடித்து அசத்தினார்.

1000 போட்டிகள்..789 கோல்கள்.. மாரடோனாவின் சாதனை முறியடிப்பு.. கால்பந்தில் உச்சம் தொடும் ஜாம்பவான் மெஸ்ஸி!

இதன்மூலம் அர்ஜென்டினா ஜாம்பவான் மாரடோனா உலகக்கோப்பையில் அடித்த 8 கோல்கள் என்ற சாதனையை கடந்துள்ளார். உலகக்கோப்பையில் 9 கோல் அடித்துள்ள மெஸ்ஸி இன்னும் 2 கோல் அடித்தார் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்துள்ள பட்டிஸ்டூடாவின் 10 கோல் என சாதனையை முறியடிப்பார்.

இதுவரை 2006,2010,2014,2018 என நான்கு உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி அதில் நாக் அவுட் சுற்றில் ஒருமுறை கூட கோல் அடித்ததில்லை. ஆனால் தற்போது கோல் அடித்ததன் மூலம் அந்த குறையை போக்கியுள்ளார்.

1000 போட்டிகள்..789 கோல்கள்.. மாரடோனாவின் சாதனை முறியடிப்பு.. கால்பந்தில் உச்சம் தொடும் ஜாம்பவான் மெஸ்ஸி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டி மெஸ்ஸியின் 1000-வது போட்டியாக அமைந்துள்ளது. க்ளப் மற்றும் சர்வதேச அளவில் இந்த சாதனையை எட்டியுள்ள மெஸ்ஸி இதுவரை 789 கோல்களை அடித்திருக்கிறார்.அதில் அர்ஜென்டினா அணிக்காக 92 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். கோல்டன் பால், பாலன் டீ ஓர், சாம்பியன்ஸ் கோப்பை. லீக் ஒன் கோப்பை, லா லீகா கோப்பை, கோபா டெல் ரே, கிளப் உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா, ஒலிம்பிக் தங்கம் போன்றவற்றை வென்றுள்ள மெஸ்ஸி வெல்லாத ஒரே கோப்பையாக உலகக்கோப்பை மட்டுமே இருக்கும் நிலையில், இந்த முறை அதையும் வெல்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories