விளையாட்டு

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கவுள்ளன.

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்க இருக்கின்றன. எந்தெந்த அணிகள் எந்தெந்த அணியுடன் மோதுகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?

நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து -அமெரிக்கா

அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா

ஜப்பான் - குரேஷியா

பிரேசில் - தென் கொரியா,

இங்கிலாந்து - செனெகல்

பிரான்ஸ் - போலந்து

மொராக்கோ- ஸ்பெயின்

போர்ச்சுக்கல் - ஸ்விட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. தினமும் இரண்டு நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முறையே இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?

இன்று இரவு 8.30மணிக்கு நடைபெறும் முதல் நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் விளையாட உள்ளன. இதை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாவது நாக் அவுட் சுற்றில் 2முறை சாம்பியனான பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அர்ஜெண்டின அணி, நாக் அவுட் சுற்றில் வெற்றியை பெரும் பட்சத்தில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவரின் கோல் ஆட்டத்தை கொண்டாட ஒட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகத்துடன் காத்துள்ளனர். லீக் சுற்றில் சவுதி அரேபியாவிற்கு எதிராக தோற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் எழுச்சியுடன் அணி வீரர்கள் விளையாடினர். நாக் அவுட் சுற்றில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பையில் மரடோனா அடித்த கோல்களை தாண்டுவார்.

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?

அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 2006ஆம் ஆண்டுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஒட்டுமொத்த ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட காலிறுதிக்கு முன்னேறாத ஆஸ்திரேலியா, 2வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆகையால், முதல் முறையாக காலிறுதிக்குள் முன்னேறி வரலாற்றை திருத்தி எழுத காத்திருக்கிறது. இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய களத்தில் பறக்க விடும் அனல் பறந்த ஆட்டத்தை காண காத்துள்ளனர் ரசிகர்கள்.

ஒட்டுமொத்த உலக கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகளும் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில், ஐந்து முறை அர்ஜென்டினாவும் ஒரு முறை ஆஸ்திரேலியாவும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

#FIFA2022 -காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று தொடக்கம்.. மோதும் அணிகள் என்னென்ன ? சாதிப்பாரா மெஸ்ஸி ?

மற்ற அணிகளை பொறுத்தவரையில் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதை தொடர்ந்து, நடப்பு சாம்பியனாக அங்கம் வகிக்கும் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. இதே போல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2010க்கு பிறகு தென்கொரியா நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

குரூப் சுற்றி ஆட்டங்களை பொறுத்தவரையில் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, உலகின் இரண்டாம் ரேங்கில் உள்ள பெல்ஜியம், நட்சத்திர வீரர் சுவாரஸ்-ன் உருகுவே உள்ளிட்ட அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. இது ஒரு புறம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ள அணிகள் மோதுவது பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

-மீனா.

banner

Related Stories

Related Stories