கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகளுடன் ஜாம்பவான் அணிகள் அடுத்தடுத்து முதல் லீக் போட்டியிலேயே தோற்றுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் நட்சத்திர அணிகளுக்கே சவாலாக இருந்து வருகிறது. மேலும் லீக் போட்டிகள் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டதால் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகள் பரபரப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் முதல் கோல் அடித்தது ரொனால்டோவா அல்லது ப்ரூகேனாவ என்ற சர்ச்சை எழுந்தது. மேலும் இந்த போட்டியில் 2 -0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ப்ரூனோ பந்தைக் கோல் நோக்கி அடித்தார். அப்போது அது ரொனால்டோ தலையில் பட்டுதான் கோல் ஆனது என ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் ரொனால்டோவுடம் தனது தலையில் பட்டுதான் கோல் போனது என கூறினார். இதையடுத்து நடுவர்கள் அது ப்ரூனோ அடித்த கோல்தான் அது எனத் தீர்ப்பு கொடுத்தனர்.
இதையடுத்து இந்த கோல் யார் அடித்தது என்ற சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் எழுந்து விட்டது. பலரும் பல விதமாகக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்சார் தொழில் நுட்ப உதவியுடன் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள கோலை அடித்தது ப்ரூனோதான் என அடிடாஸ் தீர்ப்பு வழங்கி சர்ச்சைக்கு முற்று புள்ள வைத்துள்ளது.
மேலும் இந்த சென்சாரில் பார்க்கும்போது ரொனால்டோ தலையில் பந்து படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த உலகக் கோக்பை தொடரில் விளையாடும் பந்தை அடிடாஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மேலும் முதல் முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் பந்தில் சென்சார் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.