விளையாட்டு

இப்போதும் ரிஷப் பண்ட் மேட்ச் வின்னர்தான்.. ஆனால்? : மனம் திறந்து பேசிய முன்னாள் வீரர்!

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பண்டை முதல் 3 இடங்களில் பேட் செய்ய வைத்தால் அவர் சிறப்பாக விளையாடுவார் என முன்னாள் இந்திய அணி வீரர் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இப்போதும் ரிஷப் பண்ட் மேட்ச் வின்னர்தான்.. ஆனால்? : மனம் திறந்து பேசிய முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பண்ட் தொடர்ச்சியாகப் பெரிய ஆட்டங்களை வெளிப்படுத்தாமலே இருந்து வருகிறார். ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே ரன்களை எடுக்கிறார். மற்றபடி அடித்து ஆடவேண்டும் என்ற எண்ணத்தில் அரைசதம் கூட எடுக்க முடியாமல் தனது விக்கெட்டை இழந்து விடுகிறார்.

இருப்பினும் இந்திய அணியில் தொடர்ந்து ரிஷப் பண்ட்-க்கு இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது சர்ச்சையைக் கொடுத்தாலும் இவர் மீது இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது.

இப்போதும் ரிஷப் பண்ட் மேட்ச் வின்னர்தான்.. ஆனால்? : மனம் திறந்து பேசிய முன்னாள் வீரர்!

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கூட, பெரிதாக ரிஷப் பண்டால் விளையாட முடியவில்லை. இதற்குக் காரணம் அவர் ப்ளேயிங் சுற்றில் விளையாடவில்லை. இதற்கு பதில் தினேஷ் கார்த்திக்தான் விளையாடினார். பின்னர் அவருக்கு அரையிறுதிபோட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இருந்ததும் ரிஷப் பண்டால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிக்கு தவானும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தொடர்களிலும் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

இப்போதும் ரிஷப் பண்ட் மேட்ச் வின்னர்தான்.. ஆனால்? : மனம் திறந்து பேசிய முன்னாள் வீரர்!

இந்த நிலையில்தான் ரிஷப் பண்ட் எந்த வரிசையில் களம் இறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறிய உத்தப்பா, "இன்னும் 2 ஆண்டுகளில் உலகக்கோப்பை வர உள்ளது. இதை மனதில் வைத்து அணியைத் தயார்ப் படுத்த வேண்டும்.

ரிஷ்ப் பண்ட் முதல் 3 இடங்களில் பேட் செய்ய வேண்டும். அவர் நன்றாக விளையாடிய போட்டிகள் அனைத்தும் முதல் 3 இடங்களில்தான் இறங்கியுள்ளார். மேலும் மேட்ச் வின்னராக மாறும் வாய்ப்பும் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் டி20 போட்டியில் சிறந்த விரராக ரிஷப் பண்ட் இருப்பார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories