விளையாட்டு

"இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!

இளம் வீரர் அர்ஷதீப் சிங் இந்திய அணியின் ஜாம்பவானாக வளம் வருவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

"இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று தற்போது பரபரப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளார். குரூப் 1-ல் இருந்து இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது.

நாளை நடக்கும் குரூப் 2 பிரிவு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகலன் இறுதி நிலை தெரியவரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை இந்திய அணி ஜிம்பாப்பே அணியை சந்திக்கவுள்ள நிலையில், அதில் இந்திய அணி வெற்றிபெற்றால் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்கும்.

"இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!

இந்த தொடரில் பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக கோலி இருக்கும் நிலையில், பந்துவீச்சில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இளம் வீரர் அர்ஷதீப் சிங் இருந்து வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய அவர் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அவரை பல்வேறு முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமும் அவரை பாராட்டியுள்ளார்.

"இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!

இது தொடர்பாக பேசிய அவர்,ஆசியக் கோப்பையின்போது, நானும் வக்கார் யூனிசும் அவரது பந்துவீச்சை பற்றி தொடர்ந்து பேசினோம். பந்தை இரண்டு விதமாகவும் ஸ்விங் செய்கிறார். சரியான நேரத்தில் யார்க்கர் மற்றும் ஸ்லோ பால் வீசுகிறார். மிகச் சிறந்த பந்துவீச்சாளராக வருவதற்கு அத்தனை திறமைகளும் இவரிடம் இருக்கின்றன. இதே நிலையை அவர் தொடர்ந்தால் இந்திய அணியின் ஜாம்பவானாக வளம் வருவார்.

இவரிடம் இருக்கும் சிறப்பு என்னவென்றால், ஆசிய கோப்பை தொடரில் இவரது பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். மேலும் கேட்ச்சை முக்கியமான கட்டத்தில் தவறவிட்டார். ஆனால் இந்த இரண்டு தவறுகளிலும் தனது நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து தனது பந்துவீச்சில் கவனம் செலுத்தி அதிலே நன்றாக செயல்பட்டு வந்தார்.இளம் வயதிலேயே இந்த அளவிற்கு முதிர்ச்சியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories