விளையாட்டு

" சாதனைகள் முறியடிக்கத்தானே" -புதிய சாதனை படைத்த விராட் கோலி.. பாராட்டி தள்ளிய முன்னாள் இலங்கை கேப்டன் !

சாதனைகள் என்றால் அது முறியடிக்கப்படும். என் சாதனையை கோலி முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என லங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.

" சாதனைகள் முறியடிக்கத்தானே" -புதிய சாதனை படைத்த விராட் கோலி.. பாராட்டி தள்ளிய முன்னாள் இலங்கை கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்த நிலையில், இறுதி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

" சாதனைகள் முறியடிக்கத்தானே" -புதிய சாதனை படைத்த விராட் கோலி.. பாராட்டி தள்ளிய முன்னாள் இலங்கை கேப்டன் !

அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அந்த போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

இதில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். அந்த போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் அடித்தபோது டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனேவின் (1016 ரன்கள் ) சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

" சாதனைகள் முறியடிக்கத்தானே" -புதிய சாதனை படைத்த விராட் கோலி.. பாராட்டி தள்ளிய முன்னாள் இலங்கை கேப்டன் !

விராட் கோலியின் இந்த சாதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயவர்தனே "சாதனைகள் என்றால் அது முறியடிக்கப்படும். எப்போதோ என் சாதனைகள் முறியடிக்கப்படும். அதை கோலி செய்ததில் மிகவும் மகிழ்ச்சி, அவர் தன் கேரியர் முழுக்க ஒரு போர் வீரராக விளையாடி வருகிறார்" என புகழாரம் சூட்டியுள்ளார். ஜெயவர்த்தனே 31 இன்னிங்ஸில் இத்தனை ரன்கள் குவிந்திருந்த நிலையில், விராட் கோலி 22 இன்னிங்ஸ்களில் அதனை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories