டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக 50 ரன்கள் அடித்தார். அதேபோல் வீராட் கோலியும் 64 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடுத்தது.
பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச துவக்க வீரர்கள் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சேர்ந்து அதிரடிகாட்டினர். 7 ஓவர் வரை விக்கெட் கொடுக்காமல் 66 ரன்களை சேர்த்திருந்தனர். மேலும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட அனைவரது ஓவர்களிலும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார்.
இவரின் இந்த ஆட்டத்தைப்பார்த்த இந்திய அணி ரசிகர்கள் களக்கம் அடைந்தனர். மேலும் வங்கதேச அணி 54 ரன்கள் அடித்திருந்தபோது 21 பந்தில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டினார். இப்படியே சென்றால் நீச்சம் வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் பேசும் அளவிற்கு லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டம் இருந்தது.
அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டு 4 ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும் 85 ரன்கள் வங்கதேச அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
லிட்டன் தான் இன்னும் களத்தில் இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என வங்கதேச ரசிகர்கள் நினைத்திருந்தபோது திடீரென லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிவரை வங்தேச அணி போராடிய 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.