விளையாட்டு

"அணியில் பலருக்கு வெளியே தெரியும் அளவுக்கு தொப்பை இருக்கிறது" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிருப்தி !

பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் சிலர் முழு உடல் தகுதியுடன் இல்லை என விமர்சித்துள்ளார்.

"அணியில் பலருக்கு வெளியே தெரியும் அளவுக்கு தொப்பை இருக்கிறது" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிருப்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தகுதி சுற்று பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.

"அணியில் பலருக்கு வெளியே தெரியும் அளவுக்கு தொப்பை இருக்கிறது" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிருப்தி !

இதில் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வழக்கம் போல பாகிஸ்தானின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது. இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் பாகிஸ்தான் வீரர்கள் பல கேட்ச் மற்றும் ரன்களை கோட்டை விட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் சிலர் முழு உடல் தகுதியுடன் இல்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் அணியில் இருக்கும் பொழுது மாலிக், ஹபீஸ், அப்ரிடி போன்றோர் மட்டுமே எங்கள் உடல் தகுதியை முழு கவனமாக பார்த்துக்கொள்ளுவோம். அதே போல இப்போதும் அணியில் சிலர் மட்டுமே உடல் தகுதியை நன்றாக வைத்துள்ளார்கள்.

"அணியில் பலருக்கு வெளியே தெரியும் அளவுக்கு தொப்பை இருக்கிறது" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிருப்தி !

பாகிஸ்தான் அணியில் பலர் நன்றாக வயிறு வெளியே தெரியும் அளவிற்கு தொப்பையை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் இது அணிக்கு பின்னடைவை கொடுக்கலாம். எவ்வளவு ரன்கள் அடித்து இருந்தாலும் பீல்டிங் மோசமாக இருந்தால் அது அணிக்கு பின்னடைவு தான்" என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories