விளையாட்டு

"சிறந்த வீரர்,ஆனால் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகமாட்டார்"-இந்திய அணி வீரர் குறித்து வாசிம் அக்ரம் கருத்து!

முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாது என தெரிவித்துள்ளார்.

"சிறந்த வீரர்,ஆனால் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகமாட்டார்"-இந்திய அணி வீரர் குறித்து வாசிம் அக்ரம் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. ந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

முதல் போட்டியில் இலங்கை நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"சிறந்த வீரர்,ஆனால் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகமாட்டார்"-இந்திய அணி வீரர் குறித்து வாசிம் அக்ரம் கருத்து!

இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.இந்திய அணியில் ஜடேஜா,பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இந்தியா இந்த தொடரை எப்படி அணுகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இது தவிர பும்ராவுக்கு பதிலான மாற்று வீரரை இந்திய அணி இதுவரை அறிவிக்கவில்லை. முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சை புவனேஸ்வர் குமார்தான் தலைமை தாங்குவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

"சிறந்த வீரர்,ஆனால் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகமாட்டார்"-இந்திய அணி வீரர் குறித்து வாசிம் அக்ரம் கருத்து!

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய அணியின் சிறந்த வீரர்களில் புவனேஷ்வர் குமாரும் ஒருவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் புதிய பந்தை சரியாக கையாளுவதில் வல்லவர். ஆனால், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து ஸ்விங்காக விட்டால் அவரது வேகம் சுத்தமாக எடுபடாது.

பந்து ஸ்விங்காக விட்டால் புவனேஷ்வர் குமார் நிச்சயம் தடுமாற தொடங்குவார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவானதாக உள்ளது, ஆனால் பந்துவீச்சில் சில குறைகள் உள்ளது. பும்ராஹ்விற்கு பதிலான மாற்று வீரரையே இந்திய அணி இதுவரை தேர்வு செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories