விளையாட்டு

தோனியை பற்றி ஒற்றை வார்த்தையில் பேசி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷர்துல் !அப்படி என்ன பேசினார்?

இந்திய அணியில் அனைவரும் தோனியை மிஸ் செய்வதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.

தோனியை பற்றி ஒற்றை வார்த்தையில் பேசி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷர்துல் !அப்படி என்ன பேசினார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனியை பற்றி ஒற்றை வார்த்தையில் பேசி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷர்துல் !அப்படி என்ன பேசினார்?

இந்த நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், இந்திய அணியில் அனைவரும் தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரிய கனவு. இம்முறை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று அதற்கேற்ப தயாராகிவருகிறேன்" என்று கூறினார்.

தோனியை பற்றி ஒற்றை வார்த்தையில் பேசி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷர்துல் !அப்படி என்ன பேசினார்?

மேலும், தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்திய அணியில் அனைவரும் தோனியை மிஸ் செய்கிறார்கள், நானும்தான். 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் என தோனியின் அனுபவம் முக்கியமானது. அவரை போன்ற ஒரு வீரரை சந்திப்பது அரிது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories