விளையாட்டு

ரிக்கி பான்டிங் சொன்னதை நிருபித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: மேட்ச் வின்னராக தடம் பதிப்பாரா சூர்யகுமார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோதே சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும் என்று புரிந்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார் பான்டிங்

ரிக்கி பான்டிங் சொன்னதை நிருபித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: மேட்ச் வின்னராக தடம் பதிப்பாரா சூர்யகுமார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில மாதங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். தன்னுடைய சீரான பேட்டிங்கால் இந்தியாவின் துருப்புச் சீட்டாக மாறியிருக்கும் அவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்திருக்கிறார் அவர். 2018 ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியபோது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் சூர்யகுமார் யாதவ்.

2020, 2021 ஐ.பி.எல் தொடர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய, இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். ஆனால் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபோதே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை மாறத் தொடங்கிவிட்டது என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்.

ரிக்கி பான்டிங் சொன்னதை நிருபித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: மேட்ச் வின்னராக தடம் பதிப்பாரா சூர்யகுமார்?

2013-14ம் ஆண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது இளம் சூர்யகுமார் யாதவைக் கண்டது பற்றிக் கூறியிருக்கிறார் ரிக்கி பான்டிங். அப்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் நிறைந்து இருந்ததால் இளம் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் 2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு சென்றார் சூர்யா.

அங்கு 4 சீசன்கள் இருந்த அவர், 54 போட்டிகளில் 608 ரன்கள் எடுத்தார். 2018ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்பிய அவர், அடுத்தடுத்த சீசன்களில் 512, 424 என ரன்கள் குவித்தார். இருந்தாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோதே சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும் என்று புரிந்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார் பான்டிங்.

"நான் மும்பையில் இருந்த போது அவர் 18-19 வயதே ஆன இளம் வீரர். அவர் எங்கள் அணியில் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் அணியிலிருந்து வெளியேறிய அடுத்த ஆண்டு, அவர் கொல்கத்தா அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அங்கு தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை மாறத் தொடங்கியது.

ரிக்கி பான்டிங் சொன்னதை நிருபித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: மேட்ச் வின்னராக தடம் பதிப்பாரா சூர்யகுமார்?

அங்கு அவர் மிடில் ஆர்டரில் சில வாய்ப்புகள் பெற்றார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. இப்போது ஐந்து - ஆறு சீசன்களாக அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார். ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களுள் ஒருவராகவும் உருவெடுத்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார் பான்டிங்.

சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய மனநிலை பற்றிப் பேசியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். "நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னுடைய மன்நிலை இதே மாதிரி தான் இருக்கிறது. இப்போது அது சரியான பாதையைக் கண்டிருக்கிறது. பெரிதாக எதுவும் மாறவில்லை.

என்னுடைய பயமற்ற அணுகுமுறையை நான் எப்போதும் நேசித்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகம் ஆன போது கூட என்னுடைய மனதில் அட்டாக் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்போதும் கூட அட்டாக் தான் சிறந்த டிஃபன்ஸ் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனால் அது எனக்குள் நன்றாக ஊறிவிட்டது" என்று அந்த பேட்டியில் கூறினார் சூர்யகுமார் யாதவ்.

banner

Related Stories

Related Stories