விளையாட்டு

PAK vs SL இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. நடந்தது என்ன ?

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ஜெர்ஸி அணிந்திருந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PAK vs SL இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துபாயில் நடந்த 2022 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதற்கு முன் நடந்த சூப்பர் 4 சுற்றில், விளையாடிய 3 போட்டிகளையும் வென்று கம்பீரமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி. குரூப் சுற்றில் இரண்டு போட்டிகளையும் வென்றிருந்த பாகிஸ்தான் அணிக்கு, அடுத்த சுற்று எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக அமையவில்லை. இலங்கையிடம் தோற்றிருந்தாலும், பரம வைரியான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை கடைசி தருணத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.

ரோஹித் தலைமையிலான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராகவும் தோல்வி அடைந்தது. அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டியைக் காண பல இந்திய ரசிகர்கள் துபாய் சர்வதேச மைதானத்துக்குச் சென்றார்கள். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் ஒரு வீடியோவில், இந்திய ஜெர்ஸி அணிந்திருந்ததால் பல ரசிகர்களுக்கு மைதானத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆதரவாளர்கள் குழுவான பாரத் ஆர்மியைச் சேர்ந்த ஒரு ரசிகர், தனக்கும் தன்னைப் போன்ற பல ரசிகர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

PAK vs SL இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. நடந்தது என்ன ?

"இது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்திய ஜெர்ஸி அணிந்திருந்ததால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியைக் காண பாரத் ஆர்மிக்கும் மற்ற இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என்று தங்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது பாரத் ஆர்மி.

பாரத் ஆர்மியானது இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரிய ரசிகர் குழு. இந்திய அணி உள்ளூர், வெளியூர் என எங்கு விளையாடினாலும் அங்கு சென்று ஆதரவளிப்பார்கள். இவர்கள் தங்களது தனித்துவமான கோஷங்களுக்கு பெயர் போனவர்கள். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர் குழுவான பார்மி ஆர்மிக்கும், இவர்களுக்குமான சமூக வலைதள சண்டைகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும்.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா, குசல் மெண்டிஸை டக் அவுட் ஆக்கி பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அந்த அணியின் நாயகனாகத் திகழ்ந்தார் பனுகா ராஜபக்‌ஷா. அவருக்கு பக்க பலமாக இருந்த தனஞ்சயா டி சில்வா 28 ரன்களும், வனிந்து ஹசரங்கா 36 ரன்களும் எடுத்தனர். அவர்களின் சிறப்பான செயல்பாடுகளால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.

பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியை மிகவும் மெதுவாகத் தான் தொடங்கியது. ரன் ரேட் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி கட்டத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். அதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை.

banner

Related Stories

Related Stories