விளையாட்டு

"சிங்கத்தின் கோட்டைக்கு சென்று சிங்கத்தை வீழ்த்திய ஜிம்பாப்வே" -சரித்திர சாதனை படைத்து அபாரம் !

3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.

"சிங்கத்தின் கோட்டைக்கு சென்று சிங்கத்தை வீழ்த்திய ஜிம்பாப்வே" -சரித்திர சாதனை படைத்து அபாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் ஆடிவருகிறது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டவுன்ஸ்வில்லே நகரில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

"சிங்கத்தின் கோட்டைக்கு சென்று சிங்கத்தை வீழ்த்திய ஜிம்பாப்வே" -சரித்திர சாதனை படைத்து அபாரம் !

கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்கள்,ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்கள், அலெக்ஸ் கேரி 4 ரன்கள்,மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்கள், கிறிஸ் கிரீன் 3 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய துவக்க வீரர் டேவிட் வார்னர் 94 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் மாருமனி 47 பந்துகளில் 4 பவுண்டரி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

"சிங்கத்தின் கோட்டைக்கு சென்று சிங்கத்தை வீழ்த்திய ஜிம்பாப்வே" -சரித்திர சாதனை படைத்து அபாரம் !

பின்னர், களமிறங்கிய கேப்டன் ரெஜிஸ் சகப்வா பின்வரிசை வீரர்களோடு இணைந்து சிறப்பாக ஆட 39 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 142 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரெஜிஸ் சகப்வா 37 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை ஆஸ்திரேலியாவோடு 32 ரன்களில் நேருக்கு நேர் மோதிய ஜிம்பாப்வே அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். அதேபோல ஆஸ்திரேலியாவில் அந்த அணி பெற்ற முதல் வெற்றியும் இதுவாகும். ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டிலேயே வீழ்த்திய ஜிம்பாப்வே அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories