விளையாட்டு

போட்டிக்குச் சென்ற போது கார் விபத்தில் சிக்கிய பிரபல அம்பயர் பலி - யார் இந்த ரூட் கர்ட்சன் ?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட பிரபல நடுவர் ரூட் கர்ட்சன் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்குச் சென்ற போது கார் விபத்தில் சிக்கிய பிரபல அம்பயர் பலி - யார் இந்த ரூட் கர்ட்சன் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட பிரபல நடுவர் ரூட் கர்ட்சன் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ரூட் கர்ட்சன். 2002ம் ஆண்டுமுதல் 331 போட்டிகளில் நடுவராக பணியாற்றி அதிக போட்டிகளில் இடம்பெற்றவர் நடுவர் ரூட் கர்ட்சன்.

அதுமட்டுமல்லாது, ரூடி கர்ட்சன், அலீம் தார், ஸ்டீவ் பக்னர் போன்ற 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் நடுவர் பணியாற்றியவர்கள். மேலும் 1992-93-ல் இந்தியா முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா சென்ற போது 43வது வயதில் முதன் முதலில் நடுவர் பணியாற்றியவர் ரூடி கர்ட்சன்.

இந்நிலையில், கேப்டவுனிலிருந்து ஈஸ்டர்ன் கேப்புக்கு கால்ஃப் போட்டிக்குச் சென்ற ரூடி கர்ட்சன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக நாடுகளில் உள்ள கிரிக்கெர் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories