விளையாட்டு

டி20-க்கு அவர் செட் ஆக மாட்டார், அவரை எல்லாம் ஏன் அணியில் எடுக்கிறீர்கள்? -முன்னாள் வீரர் விமர்சனம் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்ததை முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளது.

டி20-க்கு அவர் செட் ஆக மாட்டார், அவரை எல்லாம் ஏன் அணியில் எடுக்கிறீர்கள்? -முன்னாள் வீரர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டி டிரினிடாட் நகரில் உள்ள பிரயன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் எடுத்த முடிவை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கினார் ஷ்ரேயாஸ். சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷன் கிஷன் போன்ற வீரர்கள் இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது விநோதமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

"அடுத்து வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டால் ஒரு சில முடிவுகள் மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷன் கிஷன் போன்றவர்கள் அணியில் இருக்கும்போது பிளேயிங் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயரை சேர்த்திருப்பது மிகவும் விநோதமாக இருக்கிறது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மூவரும் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்கப்போகிறார்கள் எனும்போது சரியான பேலன்ஸை கண்டறிவது மிகவும் முக்கியம்" என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

டி20-க்கு அவர் செட் ஆக மாட்டார், அவரை எல்லாம் ஏன் அணியில் எடுக்கிறீர்கள்? -முன்னாள் வீரர் விமர்சனம் !

இந்தப் போட்டியில் ஓபெட் மெகாய் வீசிய பந்தில் எட்ஜாகி ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 4 பந்துகள் ஆடிய அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்திருந்தார் ஷ்ரேயாஸ். அதைப் பற்றி ஒரு ரசிகர் குறிப்பிட்டதும், ஷ்ரேயாஸ் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான வீரர் என்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் சர்வதேச டி20 போட்டிகளுக்கு சரியான தேர்வு இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

"50 ஓவர் போட்டிகளில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் டி20 ஃபார்மட்டைப் பொறுத்தவரை அவரை விட சிறப்பான வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களால் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முடியும். தன்னுடைய டி20 கிரிக்கெட் திறனை ஷ்ரேயாஸ் ஐயர் வ்ளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

டி20-க்கு அவர் செட் ஆக மாட்டார், அவரை எல்லாம் ஏன் அணியில் எடுக்கிறீர்கள்? -முன்னாள் வீரர் விமர்சனம் !

ஒருநாள் தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருசில வீரர்களுள் ஒருவரான இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். 44 பந்துகள் சந்தித்த அவர் 7 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள் உள்பட 64 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். ரவிச்சந்திரன் அஷ்வின் உடன் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். அந்த இணை ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories