விளையாட்டு

"இந்திய அணியை பாரபட்சமில்லாமல் கடுமையாக தாக்குவோம்"- ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. என்ன செய்யப்போகிறது TEAM INDIA

நியூசிலாந்தை எந்த மனநிலையுடன் வீழ்த்தினோமோ, அதே மனநிலையுடன் இந்திய அணியை மிகவும் கடுமையாக தாக்க போகிறோம் என இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

"இந்திய அணியை பாரபட்சமில்லாமல் கடுமையாக தாக்குவோம்"- ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. என்ன செய்யப்போகிறது TEAM INDIA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு அணி 3-1 என்ற கணக்கில் வென்று நியூஸிலாந்து அணியை வைட் வாஷ் செய்தது. இங்கிலாந்து அணி இந்த தொடரில் கிட்டத்தட்ட டி20 மோடில்தான் ஆடியது.

எப்போதும் மெதுவாக ஆடும் ஜோ ரூட் கூட இந்த தொடரில் ஒருநாள் போட்டி போல ஆடினார். அதற்கு அடுத்த வந்த பேர்ஸ்டோவ் ஐபிஎல் மோடில்தான் இந்த தொடர் முழுக்க ஆடினார். அவரது ஆட்டமே இந்த தொடரை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

"இந்திய அணியை பாரபட்சமில்லாமல் கடுமையாக தாக்குவோம்"- ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. என்ன செய்யப்போகிறது TEAM INDIA

அணியின் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணமே அந்த அணியின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் மெக்கல்லம்தான். கிட்டத்தட்ட ஓவருக்கு 5 ரன்ரேட் கணக்கில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியின் தலைக்கீழ் மாற்றம்தான்.

வெள்ளை பந்து போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் கொண்டுவந்த அணுகுமுறையை டெஸ்ட் போட்டிக்கும் அமல்படுத்தியது அந்த அணிக்கு பெரிய அளவில் உதவியுள்ளது. இதுவரை’ கிரீன்டாப் ட்ராக்’ அமைத்தே வெற்றிபெற்ற வந்த இங்கிலாந்து அணி இந்த தொடரில் ’பிளாட் ட்ராக்’ அமைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற அணியான நியூஸிலாந்தை வைட் வாஷ் செய்துள்ளது.

"இந்திய அணியை பாரபட்சமில்லாமல் கடுமையாக தாக்குவோம்"- ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. என்ன செய்யப்போகிறது TEAM INDIA

இந்த தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணி இந்திய அணியை சந்திக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியை எச்சரித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர்," நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நியூசிலாந்தை எந்த மனநிலையுடன் வீழ்த்தினோமோ, அதே மனநிலையுடன் இந்திய அணிக்கு எதிராக களமிறங்குவோம். பாரபட்சமே பார்க்காமல் மிகவும் கடுமையாக தாக்க போகிறோம்.

நான் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் வெற்றியை தாண்டி வீரர்களின் மனநிலையை மாற்ற விரும்பினேன்.அதற்கான முடிவு நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக கிடைத்தது. நியூசிலாந்துடனான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 55- 6 என்ற நிலையில் இருந்து அங்கிருந்து 360 - 10 என்ற நிலைக்கு சென்றதுதான் இதற்கு உதாரணம் . ஆட்டத்தில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எங்களால் நல்ல நிலைமைக்கு செல்ல முடியும்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories