விளையாட்டு

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!

அணியிலிருந்து கழட்டவிடப்பட்டால் எப்படிப் போராடி மீண்டும் அணிக்குள் நுழையவேண்டும் என்று இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் புஜாரா என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து அணிக்கெதிராக பிர்மிங்ஹம் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் நான்கு போட்டிகள் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமே ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்திருக்கவேண்டிய அந்த ஐந்தாவது போட்டி, இந்திய அணியில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால், வரும் ஜூலை 1ம் தேதி அந்தப் போட்டி நடக்கவிருக்கிறது.

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சடேஷ்வர் புஜாராவும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் புஜாரா. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா, சரியாக விளையாடாததால் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை. சசெக்ஸ் அணிக்காக இரண்டாவது டிவிஷன் சாம்பியன்ஷிப்பில் ஐந்து போட்டிகளில் விளையாடினார் புஜாரா. அதில் நான்கு 100+ ஸ்கோர்கள். அவற்றுள் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்தார் 34 வயதான புஜாரா.

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!

டெர்பிஷயர் அணிக்காக ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்த புஜாரா, வோர்செஸ்டயர் அணிக்கெதிராக 109 ரன்கள் எடுத்தார். டர்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் 203 ரன்கள் குவித்த அவர், மிடில்செக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 170 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக அவர் 720 ரன்கள் குவித்ததால், இந்திய தேர்வுக் குழு மீண்டும் அவரை தேசிய அணிக்கு அழைத்திருக்கிறது.

இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய அசத்தலான ஃபார்மைத் தொடங்க புஜாரா காத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். ரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்டிராவுக்காக விளையாடிய புஜாரா, மும்பை அணிக்கெதிராக 91 ரன்கள் எடுத்து அசத்தினார். கோவா அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்திருந்தார். இதுவரை இந்திய அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கும் புஜாரா, 43.87 என்ற சராசரியில் 6713 ரன்கள் குவித்திருக்கிறார்.

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!

"நீங்கள் புஜாராவிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கீறது. ஒருவேளை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டால், ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் என்ன செய்யவேண்டும்? ரஞ்சி டிராபியிலோ, கவுன்டி சாம்பியன்ஷிப்பிலோ மீண்டும் விளையாடச் சென்று ரன்களாக குவித்துத் தள்ளவேண்டும். அதைத்தான் புஜாரா செய்திருக்கிறார்" என்று சமீபத்தில் மீடியாவுக்குக் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் புஜாரா.

அணியிலிருந்து கழட்டிவிட்டால்.. இளம் வீரர்களுக்கு புஜாராதான் சிறந்த உதாரணம்.. முகமது கைஃப் நச் பதில்!

அதுமட்டுமல்லாமல், இந்திய விளையாடப்போகும் இந்தப் போட்டியில் தன்னுடைய வழக்கமான மூன்றாவது பொசிஷனில் புஜாரா விளையாடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார் கைஃப். சமீபத்தில் ரொஹித் ஷர்மா, சுப்மன் கில் இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கு வீடியோவை வெளியிட்டிருந்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதனால், அவர்கள் இருவருமே பிர்மிங்ஹம் போட்டியில் ஓப்பனர்களாக இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அணியிலிருந்து கழட்டவிடப்பட்டால் எப்படிப் போராடி மீண்டும் அணிக்குள் நுழையவேண்டும் என்று இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் புஜாரா. கடந்த சில மாதங்களாக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை இளைஞர்கள் நன்கு அறிந்துகொள்ளவேண்டும். இந்திய அணிக்காகவும் மகத்தான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் புஜாரா. இந்திய அணிக்காக மீண்டும் மூன்றாவது வீரராக அவர் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார் முகமது கைஃப்.

banner

Related Stories

Related Stories