விளையாட்டு

கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் : ‘நான் போராடிய யுத்தம் அதுதான்’ - ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன ?

முன் நான் போராடிய யுத்தம் அதுதான். என் வாழ்க்கையில் நான் எப்போதுமே கடுமையாக உழைத்திருக்கிறேன். அது எப்போதுமே எனக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் : ‘நான் போராடிய யுத்தம் அதுதான்’ - ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தியா. டெல்லியில் நடந்த அந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்திருந்தது இந்தியா. இருந்தாலும், ரஸி வான் டெர் டுசன், டேவிட் மில்லர் ஆகியோரின் அசத்தலான பேட்டிங்கால், 5 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

ரிசப் பன்ட் தலைமை தாங்கிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் சர்வதேச அரங்கில் கம்பேக் கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் தான் பேட்டிங் செய்தார் என்றாலும், தன்னுடைய பலமான சிக்ஸ் ஹிட்டிங் திறமையால் 12 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மிரட்டினார் ஹர்திக் பாண்டியா.

2022 ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வெல்வதற்குக் காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு இறுதிப் போட்டியில் மோதிய குஜராத் டைட்டன்ஸ், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஹர்திக், 487 ரன்கள் குவித்து அந்த அணியின் டாப் ரன் ஸ்கோரராக விளங்கினார்.

சமீபத்தில் ஐ.பி.எல் 2022 தொடர் குறித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் மிகவும் சந்தோஷப்பட்டது எனக்கு எதிராக நான் போராடி வென்ற போரினைத்தான். மற்ற விஷயங்களுக்காகவும் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஐ.பி.எல் வெற்றி பெற்றது இருக்கட்டும், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதே எங்களுக்குப் பெரிய விஷயம் தான். ஏனெனில், எங்கள் அணி வெற்றி பெறும் என்று யாருமே நினைக்கவில்லை. தொடர் தொடங்கும் முன்பே எல்லோரும் எங்களைக் குறைத்து மதிப்பிட்டனர். எங்கள் திறமை மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. நான் மீண்டும் களத்துக்குத் திரும்புவதற்கு முன்பே என்னைப் பற்றிப் பல விஷயங்கள் சொல்லப்பட்டன” என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகான நான்கு மாதங்களில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, இரவு 9.30 மணிக்குத் தூங்கச் சென்றதாக தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா. “இதையொன்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் கடைபிடித்த புராசஸை நினைத்து பெருமைப்படுகிறேன். சரியாகப் பயிற்சி செய்வதை உறுதி செய்ய தினமும் அதிகாலை 5 மனிக்கு எழுந்தேன். தொடர்ந்து 4 மாதங்களாக 5 மணிக்கு எழுந்து, இரவு 9.30 மணிக்கு தூங்கிவிடுவேன். அதனால், பல தியாகங்கள் செய்யவேண்டியிருந்தது. ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன் நான் போராடிய யுத்தம் அதுதான். என் வாழ்க்கையில் நான் எப்போதுமே கடுமையாக உழைத்திருக்கிறேன். அது எப்போதுமே எனக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

banner

Related Stories

Related Stories