விளையாட்டு

“டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயர் பொறிக்கப்படும்” : இளம் வீரருக்கு Certificate கொடுக்கும் சேவாக்!

100 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் விளையாடுவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயர் பொறிக்கப்படும்” : இளம் வீரருக்கு Certificate கொடுக்கும் சேவாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. வெகு சில வீரர்கள் மட்டுமே அந்த மகத்தான மைல்கல்லை எட்டியிருக்கிறார்கள். எம்.எஸ்.தோனி, முகமது அசாருதீன் போன்ற ஜாம்பவான்களே அந்த மைல்கல்லை எட்டவில்லை. அதுவே சொல்லிவிடும் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை. கடந்த ஆண்டு தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங் போன்ற சூப்பர் ஸ்டார்களோடு இணைந்தார்.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இன்னொரு இந்திய ஜாம்பவனான விரேந்திர சேவாக், இந்த ஒரு இந்திய வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடக்கூடியவர் என்று சொல்லியிருக்கிறார். அது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். 24 வயதேயான ரிசப் பண்ட்டின் டெஸ்ட் கரியர் மிகவும் அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே அவர் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டார். வெகுகாலம் இந்திய அணியில் பண்ட் விளையாடிவிட்டார் என்றால், அவர் நிச்சயம் இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக உருவெடுப்பார் என்று சொல்லியிருக்கிறார் விரேந்திர சேவாக்.

“ரிசப் பன்ட் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார் என்றால், அவர் பெயர் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படும். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளை 11 இந்திய வீரர்கள் மட்டுமே விளையாடியிருக்கிறார்கள். நம்மால் அவர்கள் 11 பேரின் பெயரையுமே நினைவுகூற முடியும். ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதின் அவசியத்தை விராட் கோலி அடிக்கடி உணர்த்துகிறார்? அவருக்குத் தெரியும் 100-150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டாலோ, இல்லை 200 போட்டிகளை விளையாடிவிட்டாலோ அவரை வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து அழிக்க முடியாது என்று அவருக்குத் தெரியும்” என்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார் விரேந்திர சேவாக்.

“டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயர் பொறிக்கப்படும்” : இளம் வீரருக்கு Certificate கொடுக்கும் சேவாக்!

ரிசப் பன்ட்டுக்கு இன்னும் 25 வயது கூட ஆகவில்லை. அவரால் சீராக இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு விளையாட முடியும். அப்படியிருக்கும்போது அவர் அந்த மைல்கல்லை எட்டுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் இந்த 4 ஆண்டுகளில் பல முக்கியமான செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறார் பண்ட். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் ஆடிய தன்னுடைய முதல் தொடரிலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார் பண்ட். 2020/21 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2 அதிமுக்கிய இன்னிங்ஸ்களில் ஆடி தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநாட்டினார் பண்ட்.

இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிசப் பண்ட் 1920 ரன்கள் அடித்திருக்கிறார்கள். அவரது சராசரி 40.85. இதுவரை 4 சதங்களையும் 9 அரைசதங்களையும் அடித்திருக்கிறார் ரிசப் பண்ட்.

banner

Related Stories

Related Stories