விளையாட்டு

மீண்டும் பலம் வாய்ந்த குஜராத்தை வெல்லுமா சன்ரைசர்ஸ்? : பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? #GTvsSRH

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மீண்டும் பலம் வாய்ந்த குஜராத்தை வெல்லுமா சன்ரைசர்ஸ்? : பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? #GTvsSRH
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: வான்கடே, மும்பை

நேருக்கு நேர்:

போட்டிகள்: 1

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி: 0

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 1

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா - 6 போட்டிகளில் 295

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா - 7 போட்டிகளில் 220

சிறந்த பௌலர்:

குஜராத் டைட்டன்ஸ்: முகமது ஷமி - 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டி.நடராஜன் - 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: விளையாடிய 7 போட்டிகளில், 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது (24/4/2022 தேதியின்பட) குஜராத் டைட்டன்ஸ். இந்த சீசனில் 6 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி குஜராத் டைட்டன்ஸ் தான். வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தித்தான் தங்கள் ஐபிஎல் பயணத்தைத் தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ 7 போட்டிகளில், 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (24/4/2022 தேதியின்படி) இருக்கிறது.

இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே தோற்று மோசமாக தொடங்கியிருந்த அந்த அணி, இப்போது தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. சன்ரைசர்ஸ் இதுவரை வான்கடே மைதானத்தில் விளையாடவில்லை. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருக்கும் ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான். டிஒய் பாடில் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது சன்ரைசர்ஸ். ஹர்திக் பாண்டியா அரைசதம் அடிக்க, முதலில் பேட்டிங் செய்த குஜராத் 162 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரண் போன்றவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய, ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ்.

மீண்டும் பலம் வாய்ந்த குஜராத்தை வெல்லுமா சன்ரைசர்ஸ்? : பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? #GTvsSRH

கடைசிப் போட்டியில்: இரண்டு அணிகளுமே தங்களுடைய கடைசி போட்டியில் வெற்றியை ருசித்திருக்கின்றன. முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். குஜராத் 158 ரன்களே அடித்திருந்தாலும், சிறப்பாக பந்துவீசி கொல்கத்தாவை 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெற்றது. தங்கள் கடைசிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ். அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்த, 68 ரன்களுக்கு பெங்களூரை ஆளாக்கியது சன்ரைசர்ஸ். அதை வெறும் எட்டே ஓவர்களில் சேஸ் செய்து ரன்ரேட்டையும் பலப்படுத்தியது.

மாற்றங்கள்: இரண்டு அணிகளும் வெற்றியில் இருந்து திரும்பியிருப்பதால் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

குஜராத் டைட்டன்ஸ்: ரித்திமான் சஹா (WK), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், அபினவ் மனோஹர், ராகுல் தெவேதியா, ரஷித் கான், அல்சாரி ஜோசஃப், யாஷ் தயால், லாகி ஃபெர்குசன், முகமது ஷமி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (C), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரண் (WK), சஷாங் சிங், ஜெகதீஷா சுசித், புவ்னேஷ்வர் குமார், மார்கோ யான்சன், டி.நடராஜன், உம்ரான் அக்மல்

banner

Related Stories

Related Stories