விளையாட்டு

CSK-வுக்கு தலைவலியை கொடுக்கப்போகும் அந்த இரண்டு இடங்கள்.. தடைகளை தாண்டி வெல்வாரா புதிய கேப்டன் ஜடேஜா?

ஐ.பி.எல் 15வது சீசனின் தொடக்க போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன.

CSK-வுக்கு தலைவலியை கொடுக்கப்போகும் அந்த இரண்டு இடங்கள்.. தடைகளை தாண்டி வெல்வாரா புதிய கேப்டன் ஜடேஜா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் 15வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் கூட இந்த இரண்டு அணிகளுமே மோதியிருந்தன. கொல்கத்தாவை வீழ்த்தியே சென்னை அணி சாம்பியன் ஆகியிருந்தது.

இந்நிலையில் இந்த சீசனின் தொடக்க போட்டியிலேயே இரண்டு அணிகளும் மீண்டும் மோதுவது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இத்தனை சீசன்களாக சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கும் நிலையில் முதல் முறையாக தோனியல்லாத வேறொரு முழுநேர கேப்டனோடு சென்னை அணி களமிறங்க இருக்கிறது.

புதிய கேப்டனான ஜடேஜா அணியை எப்படி வழிநடத்தி செல்லப்போகிறார் என்பதும் ரசிகர்களிடையே ஆவலை தூண்டும் விஷயமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியுமே புதிய கேப்டனுடன் தான் களமிறங்குகிறது.

கடந்த சீசனில் இயான் மோர்கன் கேப்டனாக இருந்து அணியை இறுதிப்போட்டி வரைக்கும் அழைத்து வந்திருந்தாலும் அவரின் சொதப்பலான பேட்டிங் பெர்ஃபார்மென்ஸால் கொல்கத்தா அணி அவரை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரை 12.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து அவரை புதிய கேப்டனாக ஆக்கியிருக்கின்றனர்.

CSK-வுக்கு தலைவலியை கொடுக்கப்போகும் அந்த இரண்டு இடங்கள்.. தடைகளை தாண்டி வெல்வாரா புதிய கேப்டன் ஜடேஜா?

சென்னை அணியைப் பொறுத்தவரை கடந்த சீசன்களில் ஆடிய பெரும்பாலான வீரர்களை அப்படியே தக்கவைத்திருப்பதால் ஒரு புதிய ப்ளேயிங் லெவனை கட்டமைப்பதில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனாலும், சிறிதாக சில சிக்கல்கள் இருக்கிறது.

மொயீன் அலி, கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடியிருந்தார். ருத்துராஜ் கெய்க்வாட், டூப்ளெஸ்சிஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அதிக ரன்களை எடுத்த வீரராகவும் இருந்தார். பௌலிங்கிலும் எக்கனாமிக்கலாக வீசியிருந்தார். சென்னை அணி சாம்பியன் ஆவதற்கு மிக முக்கிய காரணமாகவும் இருந்தார். அவர் இந்த கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. விசா கிடைக்க தாமதமானதால் மிக தாமதமாகவே மும்பை வந்து சேர்ந்தார். இதனால் இந்த முதல் போட்டியில் ஆடப்போவதில்லை.

எனவே இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் பெர்ஃபார்மென்ஸில் சின்ன தடுமாற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேமாதிரி, பௌலிங்கில் தீபக் சஹார் காயம் காரணமாக முதல் பாதி ஐ.பி.எல்-லில் ஆடப்போவதில்லை. தீபக் சஹாரும் கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை அணியின் வெற்றிக்கு மிகப்பெரியளவில் பங்களிப்பு செய்திருக்கிறார். அவருடையை இடத்தை நிரப்பும் வகையில் அனுபவமிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் சென்னை அணியிடம் இல்லை. ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், கே.எம்.ஆசிப், துஷார் தேஷ்பாண்டே போன்ற அனுபவமற்ற வீரர்களே நிரம்பியிருக்கின்றனர். இவர்களில் யாரோ ஒருவரோ இருவரோ நிச்சயமாக ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்தே ஆக வேண்டும்.

இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரதான இடம்பிடிக்கும் இந்த பௌலிங் லைன் அப் வலுவானதாக இருக்குமா என்பது கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் அவர்களின் பெர்ஃபார்மென்ஸை பொறுத்தே தெரியவரும். சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த இரண்டு பிரச்சனைகளும்தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஷயங்களாக இருக்கும்.

CSK-வுக்கு தலைவலியை கொடுக்கப்போகும் அந்த இரண்டு இடங்கள்.. தடைகளை தாண்டி வெல்வாரா புதிய கேப்டன் ஜடேஜா?

கொல்கத்தா அணியிலுமே பேட் கம்மின்ஸ், டிம் சவுத்தி என இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த முதல் போட்டியில் ஆடப்போவதில்லை. அதனால் அவர்களின் வேகப்பந்து வீச்சு கூட்டணியுமே கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இருக்கும். ஆனாலும், வருண் சக்கரவர்த்தி, நரைன் என இரண்டு ஸ்பின்னர்களும் அசாத்தியமாக வீசுவார்கள் என்பதால் கொல்கத்தா அணியால் சிறப்பாகவே பந்து வீச முடியும்.

பேட்டிங்கிலும் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக வந்த ஆரோன் ஃபின்ச்சும் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்றே தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் ஐயரோடு அஜிங்க்யா ரஹானே ஓப்பனராக இறங்கக்கூடும். இரண்டு அணிகளுமே சமமான பலம் பலவீனங்களோடு காட்சியளிப்பதால் இந்தப் போட்டியில் நிச்சயமாக அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories