விளையாட்டு

மீண்டும் முதலிடம் பிடித்த ஜடேஜா.. IPL முதல் 5 ஆட்டங்களில் இவர்கள் கிடையாது.. காரணம் என்ன? #SportsUpdates

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் ஐபிஎல்-லின் முதல் ஐந்து போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மீண்டும் முதலிடம் பிடித்த ஜடேஜா.. IPL முதல் 5 ஆட்டங்களில் இவர்கள் கிடையாது.. காரணம் என்ன? #SportsUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. அரை இறுதிக்கான வாப்பை தக்கவைக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ்!

நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலககோப்பை தொடரில் நாளை தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியிலும், அரை இறுதிக்கான வாப்பை தக்கவைக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண இருக்கின்றன.

வெலிங்டனில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. சர்ச் பார்க்கில் நடக்கும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இவ்விரு போட்டிகளும் முடிவு மற்றும் 27ஆம் தேதி இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகளுகிடையிலேயான போட்டியும் முடிவை பொருத்தே இந்தியாவின் அரைஇறுதி அமையும் என்பது குறிப்பிடதக்கது.

2. 134 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷஃபிக் 81 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்களும், ஸ்டார்க் 4 விக்கெட்களும், லயான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். 123 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது.

மீண்டும் முதலிடம் பிடித்த ஜடேஜா.. IPL முதல் 5 ஆட்டங்களில் இவர்கள் கிடையாது.. காரணம் என்ன? #SportsUpdates

3. ஜடேஜா மீண்டும் முதலிடம்!

ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகான சிறந்த ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். மார்ச் தொடக்கத்தில் மொஹாலியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய ஜடேஜா ஆல்-ரவுண்ர்டகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அடுத்த சில தினங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜெசன் ஹோல்டரிம் முதலிடத்தை பறிகொடுத்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் 358 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜடேஜா.

மீண்டும் முதலிடம் பிடித்த ஜடேஜா.. IPL முதல் 5 ஆட்டங்களில் இவர்கள் கிடையாது.. காரணம் என்ன? #SportsUpdates

4. ஆரோன் ஃபின்ச் விளையாட மாட்டார்!

2022ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கயுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் பிஸியாக இருப்பதால் ஐபிஎல்-லின் முதல் ஐந்து போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

5. ஒலிம்பிக் மாரத்தான் போட்டி!

கேரளாவில் ஒலிம்பிக் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. 21.1 கி.மீ தூரம் அரை மாரத்தான் போட்டியும், 10 கி.மீ தூரம் ஓட்ட பந்தயமும் மே 1ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் அரை மாரத்தான் போட்டிக்காக இதுவரையில்லாத அளவிற்கு நாட்டிலேயே அதிக பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக 11 லட்சம் வழங்கப்படும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரை மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.இரண்டாம் இடத்துக்கும் ரூ. 30,000 , மூன்றாம் இடத்துக்கு ரூ. 20,000, நான்காம் இடத்துக்கு ரூ.15,000, ஐந்தாம் இடத்துக்கு ரூ.10,000, ஆறாம் இடத்துக்கு ரூ.5,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories