விளையாட்டு

சாதனை வீராங்கனையின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிமுதல்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோகம்.. பின்னணி என்ன?

இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ரஃபேல் நடாலை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

சாதனை வீராங்கனையின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிமுதல்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோகம்.. பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ரஃபேல் நடால் தோல்வி!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வி அடைந்தார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ரஃபேல் நடாலை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

2. இகா ஸ்வியாடெக் சாம்பியன்!

அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் பி.என்.பி பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், போலந்து நாட்டு வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இகா ஸ்வியாடெக், மரியா சக்கரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சாதனை வீராங்கனையின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிமுதல்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோகம்.. பின்னணி என்ன?

3. ஊக்க மருந்து குற்றச்சாட்டு!

ரஷ்ய நடைப்பந்தய வீராங்கனை யெலினா லாஷ்மனோவா மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய உலக தடகள நேர்மை கமிட்டி அவருக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது. இதனால் 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மற்றும் 2013-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் அவர் வென்ற தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

4. இந்திய கால்பந்து அணி அறிவிப்பு!

பக்ரைன் தலைநகர் மனமாவில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணியுடன் மோதுகின்றது. இந்த போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

5. ஆஸ்திரேலிய அணி வெற்றி!

பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 271 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories