விளையாட்டு

இனி டெல்லி அணியில் வாட்சன்... என்ன செய்யப்போறார் தெரியுமா?

ல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஷேன் வாட்சன்.

இனி டெல்லி அணியில் வாட்சன்... என்ன செய்யப்போறார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் 2022 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன். அந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதிதாக இணைந்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளோடு சேர்த்து மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இத்தொடரில் பங்கேற்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் துணைப் பயிற்சியாளராக இணைந்திருக்கிறார் வாட்சன். ஒரு அணியின் பயிற்சியாளராக அவர் பணியாற்றவிருப்பது இதுதான் முதல் முறை.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன். பேட்டிங், பௌலிங் என் இரண்டிலும் அசத்தியவர். 2008 ஐ.பி.எல் தொடரிலிருந்து 2020 ஐ.பி.எல் வரை ஒவ்வொரு தொடரிலும் பங்கேற்று அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முக்கிய அங்கமாக விளங்கியிருக்கிறார்.

முதல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கினார் வாட்சன். அந்த சீசன் ஐ.பி.எல் தொடர் நாயகன் விருது வென்றதும் அவர் தான். அதுமட்டுமல்லாமல், 2013 தொடரிலும் கூட தொடர் நாயகன் விருது வென்றார். 2015 வரை அந்த அணிக்கு விளையாடியவர், 2014-ல் கேப்டனாகவும் செயல்பட்டார்.

இனி டெல்லி அணியில் வாட்சன்... என்ன செய்யப்போறார் தெரியுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடை செய்யப்பட்ட பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை வாங்கியது. 2017 வரை அந்த அணிக்கு ஆடியவர், சில போட்டிகள் அந்த அணிக்கும் கேப்டனாகவும் செயல்பட்டார். 2018 ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது. சூப்பர் கிங்ஸும் மேட்ச் வின்னராக விளங்கிய வாட்சன், 2018 ஃபைனலில் சதமடித்து அந்த அணி கோப்பை வெல்ல உதவினார்.

இதுவரை 145 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியிருக்கும் வாட்சன், 3874 ரன்கள் எடுத்திருக்கிறார். 92 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த மூன்று ஐ.பி.எல் தொடர்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் லீக் புள்ளிப் பட்டியலில் ஒவ்வொரு இடமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இப்போது வாட்சன் இணைந்திருப்பது அந்த அணியை இன்னும் பலப்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories