விளையாட்டு

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை குவிக்கும் இந்திய தங்கங்கள்.. அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தல்!

பாராலிம்பிக்ஸ் 2020ல் இந்தியாவுக்கான தங்கப்பதக்கம் நான்காக அதிகரித்துள்ளது.

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை குவிக்கும் இந்திய தங்கங்கள்.. அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒலிம்பிக்ஸை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இதுவரையில் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்றுக் குவித்திருக்கிறார்கள் இந்தியர்கள்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியில் SL3 பிரிவில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த பிரமோத் பகத்.

முன்னதாக இன்றுதான் முதன்முறையாக பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் முதல் ஆண்டிலேயே இந்திய வீரர் பிரமோத் தங்கம் வென்று சாதித்து நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இதனையடுத்து பிரமோத் பாகத்தின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்ததோடு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மேடையில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories