ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளைக் காட்டி வருகிறார்கள்.
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் ஒவ்வொரு சுற்றாக வென்று இறுதிப்போட்டிக்குச் சென்றார். இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைப்பானர் என நாடே எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை சூ யிங்-கிடம் 0-3 என்று தோல்வியடைந்தார். இருந்த போதும் தங்கம் கிடைக்காவிட்டாலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதையடுத்து உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆசியச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நிஷாத் குமார் ஏற்கனவே 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இது இவருக்கு இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும். இரண்டாவது போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் நிஷாத் குமார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தை மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அதேபோல், வட்டு எறிதல் எப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத் குமார் 19.91 மீட்டர் எட்டு எறிந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் எறிந்த இந்த தூரம் ஆசியச் சாதனையைப் படைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்று வீரர்களும் பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தேசிய விளையாட்டுப் போட்டியான இன்று இந்தியா ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அதேபோல் 2016ம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றனர். இந்த சாதனையை ஜப்பானில் இந்திய வீரர்கள் முறியடிப்பார்கள் என்ற ஆவாள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.