ஒலிம்பிக் பதக்க நிகழ்ச்சி நடக்கும் போது போட்டியாளர்கள், பதக்கம் கொடுப்பவர்கள் என எவருமே போட்டோ எடுத்துக்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டது. 206 நாடுகளைச் சேர்ந்த 11,000 வீரர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்கள். இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியில் விளையாடுபவர்கள் நிறவெறிக்கு எதிராக முதல் ஆட்டம் தொடங்கும்போது முழங்காலில் சிறிது நேரம் நிற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
வில்வித்தை, தடகளம், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டெபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆறு புது விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் 4 விளையாட்டுகள் இந்த ஒலிம்பிக்கில் அறிமுகமாகியுள்ளது. கராத்தே, ஸ்கேட்டிங், sport climbing, surfing இதோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் சேர்க்கப்பட்டிருக்கு. கிரிக்கெட் உள்ளிட்ட பத்துக்கும் மேலான விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் நடத்தப்படுவதில்லை. கொரொனா காரணமாக 2 அணிகளும் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை எனில் 2 அணிக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு பதக்கங்கள் விளையாட்டு வீரர்களுடைய கழுத்தில் அணிவிக்கப்படாது. மேடைக்கு முன்பு பதக்கங்கள் கொண்டு வரப்படும். வீரர்களே எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். குரூப் ஃபோட்டோ எடுக்கக்கூடாது. இந்த மாதிரி பல விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கு. இதற்கெல்லாம் காரணம் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நடக்காமல் போன ஒலிம்பிக் இந்த ஆண்டும் புதுவகை கொரோனாவுக்கு மத்தியில் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதுதான்.
இது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு மட்டும்தான் ஜப்பான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எல்லா நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் டோக்கியோவுக்கு செல்வதற்கு 4 நாட்களுக்கு முன்பு 2 முறை கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்ட்ம், அதில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தால்தான் போட்டியில் கலந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்டா எனும் புது வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் நாடுகளான இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான், நேபால், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர்களுக்கு புது விதிமுறை அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், டோக்கியோ புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பே தினமும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும். அதில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தால் மட்டும்தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.