விளையாட்டு

'கீழே விழுந்து.. மீண்டும் எழுந்து முதலிடம்’ : தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நெதர்லாந்து வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடி முதலிடம் பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'கீழே விழுந்து.. மீண்டும் எழுந்து முதலிடம்’ : தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நெதர்லாந்து வீராங்கனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டதை அறிந்து உலகமே நெகிழ்ந்து, 'இதுதான் உண்மையான SPORTSMANSHIP' என பாராட்டு தெரிவித்தது. இதைப்போன்ற மற்றொரு சம்பவமும் ஒலிம்பிக்கில் நடந்துள்ளது.

மகளிருக்காக நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிஃபான் ஹசன் கலந்துகொண்டார். இவர் நடப்பு உலக சாம்பியன் ஆவார்.

இந்நிலையில் போட்டி துவங்கிய சில விநாடிகளிலேயே சிஃபான் ஹசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதற்குள் மற்ற போட்டியாளர்கள் சில மீட்டர்கள் கடந்துவிட்டனர். அதுவும் இவருக்கு முன்னால் 15 போட்டியாளர்கள் சென்றுவிட்டனர்.

ஓட்டப் பந்தயத்தில் கீழே விழுந்து, பிறகு மீண்டும் எழுந்து ஓடி வெற்றி பெறுவது எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. அதுவும் இது ஒலிம்பிக் போட்டி வேறு.

இருப்பினும், மனதை தளரவிடாமல், மீண்டும் எழுந்து தனது ஓட்டத்தைப் புத்துணர்ச்சியோடு துவங்கி, படிப்படியாக ஒருவர்... மற்றொருவர் என சக போட்டியாளர்கள் அனைவரையும் தாண்டி முதல் வீராங்கனையாக இலக்கை எட்டி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிஃபான் ஹசன்.

பின்னர் சில மணி நேரத்திலேயே நடைபெற்ற 5000 மீ ஓட்டப் பந்தயத்திற்கான இறுதிப்போட்டியில் தன்னை தயார்படுத்திக் கொண்டு, அதில் 14.36.79 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.

சிஃபான் ஹசன் கீழே விழுந்தபோது ஒரு நிமிடம் நம்மால் முடியாது என நினைத்துச் சுணங்கியிருந்தால் அதிலும் முதல் வீராங்கனையாக வெற்றிக்கோட்டை எட்டியிருக்க முடியாது. 5000 மீ ஓட்டத்திலும் அவருக்குத் ஒலிம்பிக் தங்கம் கிடைத்திருக்காது. இவரது இந்த மன உறுதியை எல்லாரும் பாராட்டி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories