விளையாட்டு

#olympics - பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.. பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து !

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

#olympics - பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.. பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருந்தார் பி.வி.சிந்து. கரோலினா மரினுடன் கடைசி நொடி வரை அவர் செய்த போராட்டத்தை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை.

ஆனாலும், தங்கப்பதக்கத்தை அவர் வெல்லாமல் போனது கொஞ்சம் வருத்தத்தையே கொடுத்தது. இந்த முறை டோக்கியோவில் பி.வி.சிந்து இதுவரை ஆடியிருக்கும் ஆட்டத்தை பார்க்கும்போது தங்க பதக்கத்தை வென்றுவிடுவார் போன்றே தெரிகிறது.

குறிப்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இதுவரை ஆடியிருக்கும் மூன்று போட்டிகளையும் வென்றிருக்கிறார். மூன்று போட்டிகளிலும் எதிராளிக்கு ஒரு செட்டை கூட கொடுக்காமல் நேர் செட் கணக்கில் வென்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒன்று நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதிபெற்றார்.

காலிறுதியில் 21 - 13, 22- 20 என்ற செட் கணக்கில் நேர்செட்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் பி.வி.சிந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories