டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்க கணக்கை இந்த ஒலிம்பிக் போட்டியில் துவக்கி வைத்தார் மீரா பாய் சாய்கோம் சானு.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதனால் தான் மீரா பாய் சானுவின் வெற்றியை இந்தியாவே கொண்டாடியது. பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவரும் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்தவர் மீரபாய். வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட மீராபாய் சிறுவயதில் பெற்றோருடன் சேர்ந்து விறகுகளை வெட்டி தலையில் சுமந்தே தனது பளுதூக்கும் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். பிறகு மாவட்டம், மாநிலம், தேசியம் என தனது வெற்றிகளை குவித்து இன்று இந்தியா நாட்டிற்காக வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் நாடு திரும்பிய அவருக்கு மணிப்பூர் அரசு சிறப்பான வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் மீரா பாய் சானு குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்தப் படத்தில் எளிமையான வீட்டில் மீராபாய் சானுவிடன் இருவர் சேர்ந்து சாப்பிடுவது போன்று உள்ளது. இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு சில வலதுசாரிகள், 'வறுமை என்பது ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான கருவியாக அமைகிறது. அதனால் தான் மீராபாய் சானுவால் வெள்ளி பதக்கம் வெள்ள முடிந்துள்ளது' என அவரின் வறுமையைக் கொச்சைப்படுத்தும் விதமாக தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருவரின் வறுமையை, எளிமை என்று இப்படியா அசிங்கப்படுத்துவது வலதுசாரிகளின் கருத்திற்கு இணைய வாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரின் வறுமைக்கு யார் காரணம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.