பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு வெற்றிக் கனியை பரிசாக அளித்திருக்கிறார்கள்.
இரண்டுக்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது. சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்திய பெருமையையும் கேப்டன் அஜின்கியா ரஹானே தலைமையிலான இளம் கிரிக்கெட் வீரர்கள் பெருமையை பெற்றுள்ளனர். இதனையடுத்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 9வது முறையாக வென்றுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருதையும் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, தமிழக வீரரான நடராஜனை அழைத்து கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் ஆட்டத்தின் சில மகிழ்ச்சி தருணங்கள் படங்களாக:-