விளையாட்டு

ஒரே திட்டத்தில் புஜாராவை 6 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா!

பேட் கம்மின்ஸ், புஜாராவை 4 முறையும், ஹேசல்வுட் இரண்டு முறையும் வீழ்த்திவிட்டனர்.

ஒரே திட்டத்தில் புஜாராவை  6 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ப்ரிஸ்பேன் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தை 62/2 என்ற நிலையிலிருந்து தொடங்கியது இந்திய அணி. வழக்கம்போல மெதுவாக விக்கெட் விடாமல் ஆடி செட்டில் ஆன புஜாரா, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை இழந்திருக்கிறார். 94 பந்துகளை சந்தித்த புஜாரா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேறியிருக்கிறார்.

ஆஸியினர் புஜாராவுக்கென்று ஒரு திட்டத்தை சரியாக திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அஸ்வினிடம் ஸ்மித் இரண்டு முறை அவுட் ஆனதை நாம் பெரிதாக பேசிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், பேட் கம்மின்ஸ், புஜாராவை 4 முறையும், ஹேசல்வுட் இரண்டு முறையும் வீழ்த்திவிட்டனர். இந்த 6 டிஸ்மிசல்களில் 5 டிஸ்மிசல்கள் ஒரே லைன் & லெந்த்தில் வீசப்பட்ட டெலிவரிகளில் வந்தவை.

மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வலை விரிப்பது போல, ட்ரைவ் ஆடும் லென்த்தில் வீசியெல்லாம் புஜாராவின் விக்கெட்டை எடுத்துவிட முடியாது. அப்படி வீசினால் நாள் முழுவதும் வீசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அவர் அழகாக லீவ் செய்துவிட்டு சென்றுவிடுவார். புஜாராவின் விக்கெட்டை எடுக்க வேண்டுமானால், அவரை முதலில் ஆட வைக்க வேண்டும். அதைத்தான் ஆஸியினர் செய்தனர்.

3 வது மற்றும் 4 வது ஸ்டம்ப் லைனில் தொடந்து வீசி அவரின் விக்கெட்டை எடுப்பதுதான் ஆஸியினரின் திட்டம். குட் லென்த்தில் புஜாரவுக்கு இன்கம்மிங் டெலிவரிகளை 3, 4 வது ஸ்டம்ப் லைனில் வீசி சிறிய Deviation உண்டாக்கி பந்தை வெளியே எடுத்து எட்ஜ் ஆக்க வேண்டும். இதைத்தான் ஆஸியினர் புஜாரவுக்கு செய்தனர்.

முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது பெரும்பாலான விக்கெட்டுகளை ஆஸியினர் இப்படித்தான் எடுத்தனர். புஜாராவின் விக்கெட்டையும் கம்மின்ஸ் இப்படித்தான் எடுத்தார். அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவின் Foot work பிரச்னை குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் அந்த லைன் & லென்த்தில் வீசப்படும் டெலிவரிகளுக்கு புஜாராவின் Foot work அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால்தான், தொடர்ந்து அதேமாதிரியான டெலிவரிகளுக்கு அவுட்டாகி வருகிறார்.

முதல் போட்டியில் ரஹானேவும் அதேமாதிரியான ஒரு டெலிவரிக்கு Foot work இல்லாமல் மோசமாகத்தான் அவுட் ஆகியிருப்பார். ஆனால், அதன் பிறகு இந்த டெலிவரிகளை சமாளிப்பதில் ரஹானே தேறிவிட்டார். இன்கம்மிங் டெலிவரியாக வந்து சிறிதாக, Deviation உடன் வரும் டெலிவரிகளுக்கு முன்னங்காலை நன்கு முன்நகர்த்தி முன்னே வந்து ஆடியிருப்பார். இன்றைய போட்டியிலும் அப்படித்தான் ஆடினார். இதன்மூலம் இன்கம்மிங் டெலிவரி மற்றும் Deviate ஆகி வெளியே செல்லும் டெலிவரி இரண்டிலிருந்தும் எட்ஜ் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பி விடுகிறார்.

ரஹானே க்ரீஸுக்குள் ஒரு தடவை முன்னங்காலை அழுத்தி அதன்பிறகு நன்கு முன்னே கொண்டு வருவார். ஆனால், புஜாராவிடம் க்ரீஸுக்குள் முன்னங்காலை அழுத்தும் அந்த ஒரே மூவ் மட்டும்தான் இருக்கிறது. பந்து Deviate ஆகாமல் இன்கம்மிங் டெலிவரியாகவே வந்தால் அதை எதிர்கொள்வதற்கு இந்த மூவ் மட்டுமே போதும். ஆனால், பந்து Deviate ஆகும்போது முன்னங்கால் நன்றாக முன் வந்து, பேட்டும் நன்கு முன்னால் வரும்போதுதான் ரஹானேவை போல இந்த டெலிவரிகளை சமாளிக்க முடியும். இன்று ஹேசல்வுட் வீசிய அந்த டெலிவரியிலும் அப்படித்தான் Front foot மூமென்ட் இன்றி கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து புஜாரா அவுட் ஆனார்.

சில நேரங்களில் பின்னங்காலை ஊன்றி முன்னங்காலை ஓப்பனாக்கி மிட் ஆன் திசைக்கும் இந்த டெலிவரிகளை ரஹானே டிஃபண்ட் செய்தார். இந்த Back foot மூவ்மென்ட்டும் புஜாராவிடம் குறைவாகவே இருந்தது. இதனால்தான் கம்மின்ஸிடம் 4 முறை, ஹேசல்வுட்டிடம் 2 முறை என மொத்தம் 6 முறை புஜாரா தனது விக்கெட்டை ஒரே லைன் & லென்த்தில் வந்த டெலிவரிக்கு இரையாக்கினார்.

ரஹானேவின் Front foot commitment இந்த Incoming+ Deviated டெலிவரிகளை எதிர்கொள்ள சரியானதாக இருந்தாலும், ட்ரைவ் ஆடும் லெந்த்தில் வீசப்படும் டெலிவரிகளுக்கு இதே கமிட்மென்ட் அவருக்கு வினையாகிவிடுகிறது.

புஜாரா மாதிரியான உலகத்தரமான டெஸ்ட் கிரிக்கெட்டர் இந்த மாதிரியான சின்ன தவறுகளை சீக்கிரமே திருத்திக்கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories